ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு இலவச மருந்து தொகுப்பு! – சென்னை மாநகராட்சி


ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு பரிசோதனை முடிவு வருவதற்கு முன்னரே தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் மற்றும் தொற்று பாதித்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் சிகிச்சை குறித்து பல்வேறு நடைமுறைகள் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

Also Read  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன் அடிப்படையில் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர்புற சமுதாய நல மருத்துவமனைகளில் தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் பரிசோதனை முடிவுகள் வரும்வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி தடவல் சேகரிப்பு மையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவுக்காக காத்திருக்கும் நபர்கள் வீடுகளில் இருக்கும் நேரங்களில் அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தும் வகையில் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு மாநகராட்சியால் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.

இந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜின்க், பாரசிட்டமால் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்று அடுக்கு முகக்கவசங்கள் போன்ற மருத்துவ பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Also Read  வாக்களிக்க செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; செல்போனுக்கு தடை..!

மருத்துவர்கள் பரிந்துரைக்கும், தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் அசித்ரோமைசின் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும்.

எனவே கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவுக்காக காத்திருக்கும் நபர்கள் தொற்று பிறருக்கு பரவுதலை தடுக்கும் வகையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Also Read  ரெம்டெசிவர் தடுப்பூசி செயற்கை தட்டுப்பாடு - மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்…!

மேலும் மாநகராட்சியில் வழங்கப்படும் மருந்து தொகுப்பிலுள்ள மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை மற்றும் மாநகராட்சியின் தொலைபேசி ஆலோசனை மையங்களில் ஆலோசனை பெற்று முறையாக எடுத்துக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறையினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Tamil Mint

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil

சென்னையில் பரவலாக மழை – மகிழ்ச்சியில் மக்கள்!

Lekha Shree

“பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல”

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

தமிழுக்கு கட்டவுட்டு மற்ற மொழிகளுக்கு கெட் அவுட்டு: ஐகோர்ட்டின் சூப்பர் முடிவு

Tamil Mint

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

Lekha Shree

சட்டசபை தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

Lekha Shree

புதுவை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலை கரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

இயக்குனர் வேலு பிரபாகரன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

Tamil Mint