சென்னை: 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை!


சென்னையில் 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை தொடங்கி இரவு வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஜூலை மாதத்திற்கான மழைப்பொழிவு கடந்த காலங்களை விட அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

குறிப்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் ஜூலை மாதத்தில் மட்டும் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 2007ம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் சென்னையில் பதிவான உச்சபட்ச மழை அளவு இதுவாகும்.

ஜூன் மாதம் முதல் 27.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் மீனம்பாக்கம் பகுதியிலும் ஜூலை மாதம் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Also Read  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெட்ரோ நிலையங்களில் 'இது' அறிமுகம்…!

இந்திய வானிலை ஆய்வு மைய கணக்கீட்டின்படி சென்னை முழுவதும் இயல்பை விட 50 சதவீதம் வரை கூடுதலாக மழை பெய்துள்ளது.

ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களில் மட்டும் நுங்கம்பாக்கம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Also Read  தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

மேலும், ஜூலை மாதத்தில் 48 மணி நேரத்தில் இவ்வளவு மழை பெய்வது 200 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் இருப்பதால் இந்த மழை அளவு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் குவியும் சடலங்கள்…! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

Lekha Shree

“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.

Tamil Mint

மறைந்த தந்தையின் சிலையை வடிவமைத்து தங்கைக்கு திருமண பரிசு கொடுத்த சகோதரிகள்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

தமிழக பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

Tamil Mint

‘புரட்சித் தலைவி’ ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் இன்று

Tamil Mint

யாரை கலாய்த்தார் நடிகை கஸ்தூரி?

Tamil Mint

தடகள பயிற்சியாளர் மீது வெளிநாட்டில் இருந்தும் குவியும் பாலியல் புகார்….!

sathya suganthi

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

ஆறுபடை வீட்டில் ஆயிரக்கணக்கான போலீசார்: பாஜகவின் வேல் யாத்திரையால் திருத்தணியில் பரபரப்பு

Tamil Mint

ஆறு மாத கால அவகாசம் வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சென்னை மாநகராட்சி!

Tamil Mint

வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

“என் பாட்டியின் PSBB பள்ளிப் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்!” – மதுவந்தி அதிரடி

sathya suganthi