a

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!


சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பியதால், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. முதல் அலையைவிட 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தொற்று பரவலின் வேகம் தீவிரமாக உள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  ஒரு மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர்; கோவையின் அவலம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் வீடுகளிலும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக, சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு மையங்களில் படுக்கைகள் தவிர எந்த வசதியும் இல்லாததால், திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு உரிய அவசர சிகிச்சைகளை கொடுக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் 32,807 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 21,535 படுக்கைகள் என 54,342 படுக்கைகள் உள்ளது என்றும் இதில் 25,386 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் உள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

தமிழகத்தை பொருத்தவரையில் அரசு மருத்துவமனைகளில் பெரிய அளவிலான ஆக்சிஜன் டேங்க் வசதி உள்ளதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு படுக்கைக்கும் குழாய் வழியாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த முடியும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

கொரோனா கண்காணிப்பு மையங்களில் 35 ஆயிரம் படுக்கைள் உள்ளதென்றும் தொற்று பரவல் வேகம் காரணமாக இந்த எண்ணிக்கையை 80 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  கனமழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரறிவாளனுக்கு பரோல்

Tamil Mint

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

Tamil Mint

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

சென்னை விமான நிலையத்தில், ஓடுபாதையில் இருந்து விமானங்கள், விரைவாக விமான முனையங்களுக்கு செல்ல உதவும், ‘ராபிட் எக்ஸிட் டாக்சி வே’ எனப்படும், விரைவு பாதை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Tamil Mint

தமிழுக்கு கட்டவுட்டு மற்ற மொழிகளுக்கு கெட் அவுட்டு: ஐகோர்ட்டின் சூப்பர் முடிவு

Tamil Mint

ஜெபம் செய்ய வந்த பெண்ணிடம் சில்மிஷம்… கம்பி எண்ணும் மதபோதகர்

Jaya Thilagan

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் பணி தீவிரம்: அனைத்து ஆசிரியர்களும் வரும் 18-ம் தேதி பள்ளிக்கு வர உத்தரவு!

Tamil Mint

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

Tamil Mint