நடிகர் தனுஷுக்கு மீதமுள்ள வரியை செலுத்த உயர்நீதிமன்றம் கெடு..!


சொகுசு கார் வழக்கில் மீதமுள்ள வரியை செலுத்த நடிகர் தனுஷுக்கு 48 மணிநேரம் கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிய காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

Also Read  மகனை தொடர்ந்து கணவனும் கொரோனாவுக்கு பலி…! பிரபல நடிகை வீட்டில் நிகழ்ந்த சோகம்…!

சமீபத்தில் நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுப்பிரமணியம் வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதே நீதிபதிதான் இந்த வழக்கிற்கும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமானிய மக்கள் வரி செலுத்துகின்றனர். கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கின்றீர்கள்?” என கேள்வியெழுப்பினார்.

Also Read  ’பாரதி கண்ணம்மா’ லட்சுமி பாப்பாவா இது? செம கியூட் புகைப்படங்கள்!

நடிகர் என்பதை தெரிவிக்காமல் நுழைவு வரி விலக்கு கேட்டது ஏன்? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே. உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர் தானே மனுதாரருக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்? என கேள்வி கேட்டார்.

நுழைவு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் தரப்பு கூறியதையும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஏற்க மறுத்துவிட்டார்.

அதன்பின், “தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15 மணிக்கு தெரிவிக்க வேண்டும். கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டார்.

Also Read  நாளை ரிலீசாகிறது தனுஷின் 'ஜகமே தந்திரம்' பட டிரெய்லர்..!

அதன்படி தற்போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் தனுஷ் சொகுசு காருக்கு செலுத்த வேண்டிய மீதி 50% வரியை 48 மணிநேரத்திற்குள் செலுத்த ஆணையிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் ஆர்யாவை விடாமல் துரத்தும் பண மோசடி வழக்கு..!

suma lekha

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

Lekha Shree

தடுப்பூசி… கொரோனா… மாரடைப்பு..! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு என்ன காரணம்!

Devaraj

‘அந்தாதூன்’தமிழ் ரீமேக் ஷூட்டிங் ஆரம்பம்… முதல் நாளே இயக்குநர் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

malar

ஷாருக்கான் – அட்லீ இணையும் ‘ஜவான்’… சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய்..!

suma lekha

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

Devaraj

“தளபதியே சொல்லிட்டாரு… எனக்கு இது போதும்” – மகிழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ கவின்!

Lekha Shree

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

நடிகை வித்யுலேகா ராமனின் கலர்ஃபுல்லான திருமண புகைப்படங்கள்…!

Lekha Shree

மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி? ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு..!

Lekha Shree

மீண்டும் அழகாக மாறிய ரைசா…நலம் தானா என விசாரிக்கும் ரசிகர்கள்…

sathya suganthi