விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!


ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை வரி தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.

மேலும், “நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்கவேண்டும். சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது.

Also Read  தமிழக ரேஷன் கடைகளில் நவம்பர் வரை இலவச கோதுமை

சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல. நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு” என கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக வரி கட்டுங்க விஜய் மற்றும் வரி ஏய்ப்பு விஜய் போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி ட்ரெண்ட் ஆனது. இதனிடையே விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

Also Read  'பீஸ்ட்' படத்திற்காக களத்தில் இறங்கிய நாயகி பூஜா ஹெக்டே…!

அதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் எம்.பி., காயத்ரி ரகுராம், சீமான் போன்ற அரசியல் பிரமுகர்கள் குரல் கொடுத்தனர்.

அதையடுத்து சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் விதித்த அபராதத்தை எதிர்த்தும் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read  'பிகில்' படத்தை பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை வரி தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசான் பிரைமில் வெளியானது தனுஷின் ‘கர்ணன்’…!

Lekha Shree

மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

Tamil Mint

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் – தமிழக அரசு

Lekha Shree

‘வலிமை’ – இயக்குனர் தெரிவித்த மாஸ் அப்டேட்…!

Lekha Shree

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’!

Lekha Shree

தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

மீதமுள்ள ரூ.2,000 நிலுவைத் தொகை – கொரோனா நிவாரண நிதி இன்று முதல் விநியோகம்…!

sathya suganthi

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!

Tamil Mint

ஓடிடியில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்?

Lekha Shree

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree