a

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!


சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளை மே 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

கூட்டம் கூட்டுவதால் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற மே 1 மற்றும் 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Also Read  கொரோனா எதிரொலி - கருவுறுவதற்கு கட்டுப்பாடு…!

ஆக்சிஜன் மற்றும் தடுப்பு மருந்துகள் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்ற விசாரணை செய்து வருகிறது. அந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசு இன்று விளக்கம் அளித்தனர்.

அதன்பின்னர், நீதிபதிகள் கொரோனாவை முழுமையாக விரட்டி அடிப்பதற்கு அனைவரும் இணைந்துதான் பாடுபட வேண்டும். அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் தான் இந்த நிலைக்கு காரணம் என தெரிவித்தனர்.

Also Read  மதுரை காவலரின் மகள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை

மேலும், உழைப்பாளர் தினமான மே 1ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்த புதுச்சேரி மற்றும் தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

அதேசமயம் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு யார் யார் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தலாம் என்றும் கூறினார்.

Also Read  உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

இது தொடர்பாக புதுச்சேரி மற்றும் தமிழக அரசு முடிவெடுத்து இந்த மாதம் 28ஆம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்.5 முதல் புறநகர் ரயில் சேவை’

Tamil Mint

துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

Lekha Shree

சசிகலாவின் தமிழக வருகை – எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

Tamil Mint

‘நிழல் இல்லா நாள்’ – ஓர் அறிவியல் நிகழ்வு!

Lekha Shree

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – தமிழக அரசு

Devaraj

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Devaraj

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

வேல் யாதிரைக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு உத்தரவு

Tamil Mint

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் கூடாது: தமிழக அரசு அதிரடி

Tamil Mint

வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

Devaraj

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார்!

Tamil Mint