a

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை…!


சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளை மே 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

கூட்டம் கூட்டுவதால் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற மே 1 மற்றும் 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஆக்சிஜன் மற்றும் தடுப்பு மருந்துகள் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்ற விசாரணை செய்து வருகிறது. அந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசு விளக்கம் அளித்தனர்.

அதன்பின்னர், நீதிபதிகள் கொரோனாவை முழுமையாக விரட்டி அடிப்பதற்கு அனைவரும் இணைந்துதான் பாடுபட வேண்டும். அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் தான் இந்த நிலைக்கு காரணம் என தெரிவித்தனர்.

Also Read  டெக்னாலஜிக்கு தாவிய டாஸ்மாக்: குவார்ட்டர் வாங்க கம்ப்யூட்டர் பில்

மேலும், உழைப்பாளர் தினமான மே 1ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்த புதுச்சேரி மற்றும் தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

அதேசமயம் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு யார் யார் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தலாம் என்றும் கூறினர்.

Also Read  சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மற்றும் தமிழக அரசு முடிவெடுத்து இந்த மாதம் 28ஆம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடர்பான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படலாம் என்றும் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை கூடுதலாக விநியோகிக்கவும் உயர்நீதிமன்றம் கூறியது.

Also Read  ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

அதன் பின்னர் ரெம்டேசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய குழு சென்னை வந்தது

Tamil Mint

நீட் தற்கொலை: மாணவியின் உருக்கமான ஆடியோ

Tamil Mint

ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள் – அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

sathya suganthi

அதிரவைக்கும் லலிதா ஜூவல்லரி ஐ.டி.ரெய்டு… சேதாரம் என சொல்லி ரூ.1000 கோடியை ஆட்டையைப் போட்டது அம்பலம்…!

malar

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Devaraj

ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

Tamil Mint

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் “நீட்” பயிற்சி…!

Devaraj

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Tamil Mint

குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

Tamil Mint