வழக்கறிஞர்கள் போராட்டங்களில் பங்கேற்க நீதிமன்றம் நிபந்தனை


திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அம்மனுவில், ”வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அணிய வேண்டிய உடை குறித்து பார் கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியில் கூறப்பட்டுள்ளவாறுதான் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது பிரத்யேக ஆடை அணிய வேண்டும். இருப்பினும் இந்த விதிப்படி வழக்கறிஞர்கள் உடை அணிவதில்லை.

Also Read  தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன?

உடைக் கட்டுப்பாட்டை மீறிப் பல வழக்கறிஞர்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ், பட்டுச் சேலையுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுகின்றனர். போராட்டங்களில் வழக்கறிஞர்கள் அங்கி, கோட்டு, காலர் ஆகியவற்றை அணிந்து பங்கேற்கின்றனர். இதனால் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

எனவே, அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது பார் கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ள ஆடைகளை அணியவும், ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் அங்கி, கோட்டு, காலர் அணிந்து பங்கேற்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

Also Read  ஆபாச வார்த்தைகள்… லட்சக்கணக்கில் பணம்..! மதன் ஓபி-யின் பகீர் பின்னணி!

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டு, காலர் அணியத் தடை விதித்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

Tamil Mint

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

Lekha Shree

ஊரடங்கு காலத்தில் மின் தடை இருக்காது – தமிழக அரசு

sathya suganthi

சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Lekha Shree

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி இடப்பங்கீடு நிறைவு..!

Lekha Shree

கோவை: தடையின்றி நடக்கும் கஞ்சா விற்பனையால் விபரீதம்..!

Lekha Shree

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

Lekha Shree

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: அதிமுகவினர் வெளிநடப்பு… சாலையில் அமர்ந்து போராட்டம் ..!

Lekha Shree

ஆபாச பதிவு – யூடியூபர் திவ்யா கைது..!

Lekha Shree

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் எஸ்பிபி

Tamil Mint

தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு – வல்லூர் குழு

sathya suganthi