a

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே நோட்டீஸ் – திமுக நிர்வாகியின் கைங்காரியம்…!


கோவை தி.மு.க. நிர்வாகி சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்ற சமயம், மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் சம்பந்தப்பட்ட பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும், நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Also Read  பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரணை..!

இதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெண் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், ரயில் பயணத்தின்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சூலூர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also Read  காவலர் வீர வணக்க நாள்: தமிழகம் முழுவதும் மரியாதை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு, நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரன் வழக்கு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை ஜூன் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ப.சிதம்பரம் மருமகளின் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக!

Lekha Shree

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு; மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?- முழு விவரம்

Tamil Mint

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை…!

Lekha Shree

கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

Tamil Mint

இந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகலாம்.. ஏன் தெரியுமா..?

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

Lekha Shree

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Lekha Shree

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

அதிமுக Vs திமுக…! – நேருக்கு நேர் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

Devaraj

சென்னை: எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்

Tamil Mint