கலால் வரி குறைப்பு எதிரொலி – சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!


தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும் டீசல் மீதான கலால் வரி பத்து ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததன் எதிரொலியாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,893 பேருக்கு கொரோனா உறுதி : முழு விவரம் இதோ.!

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என பாஜக தலைவர் நட்டா கூறியுள்ளார். இதனால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தம் எதிரொலியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஓப்பெக் கூட்டம் நடைபெற உள்ளது.

Also Read  கருப்பு பூஞ்சை விட பலமடங்கு அச்சுறுத்தும் வெள்ளை பூஞ்சை நோய்…!

ஒருவேளை அந்த கூட்டத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையக் கூடும் எனவும் உற்பத்தி அதிகரிக்கப்படாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் கலால் வரி குறைப்பு அறிவிப்பை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 5.26 குறைந்து ரூ.101.40க்கும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 11.16 குறைந்து ரூ. 91.43க்கும் விற்பனையாகிறது.

Also Read  மருத்துவமனையில் புகுந்து நோயாளிகளை அதிமுக வேட்பாளர் தாக்கியதாக புகார்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்க ஈபிஎஸ்-க்கு அனுமதி!

Lekha Shree

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…! கேரளா அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி

Devaraj

வாழை கழிவுகளில் விமான பாகம் தயாரிக்கலாம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

Tamil Mint

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Mint

நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம் – இந்து சமய நிலையத்துறை!

suma lekha

திருமணத்தன்று மணமகள் உயிரிழப்பு! உடனேயே மணமகளின் தங்கையை திருமணம் செய்துகொண்ட மணமகன்!

Shanmugapriya

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: கைதாகிறாரா சீமான்?

Tamil Mint

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!

Lekha Shree

கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Lekha Shree

’கனவு நாயகன்’ அப்துல்கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று..!

suma lekha