“கே.பி.பார்க் குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளன” – ஐஐடி அறிக்கை


சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாக தரத்தை ஆய்வு செய்ய ஐஐடி நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த பொதுமக்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

Also Read  வினையான விளையாட்டு… சானிடைசரால் பறிபோன சிறுவனின் உயிர்…!

ஆனால், சிலருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டதாகவும் மேலும் பலருக்கு சரியான முறையில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் கண்டன குரல்கள் எழுந்தது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.

அதையடுத்து புளியந்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் சரியான முறையில் கட்டப்படவில்லை என்றும், சுவர்களில் பூசப்பட்டுள்ள சிமெண்ட் கலவை தொட்டாலே உதிர்கிறது என்றும் பல புகார்கள் வந்து கொண்டிருப்பதால் சர்ச்சை எழுந்தது.

Also Read  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - தனிப்படை அமைப்பு..!

அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதன்பின்னர், ஐஐடி நிபுணர் குழுவை இந்த கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று ஐஐடி நிபுணர் குழுவினர் சென்னை புளியந்தோப்பு கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

Also Read  சாட்டை துரைமுருகன் கைது - சீமான் கண்டனம்!

அதில், “கட்டடத்தின் சிமெண்ட் பூச்சு மோசமான நிலையில் உள்ளது. மாதிரிகளை ஆய்வு செய்தபோது தேவையைவிட 70 சதவிகிதம் குறைவாக சிமெண்ட் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதனங்களிலும் குறைபாடுகள் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசுக்கு எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள்

Tamil Mint

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்

sathya suganthi

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

Tamil Mint

“இசுலாமியரென்பதால் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா?” – சீமான் கண்டனம்..!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

Lekha Shree

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

Devaraj

”அண்ணாமலை நீயெல்லாம் கர்நாடக சிங்கமா? நீ ஒரு புரோக்கர்!” கிழித்தெடுத்த மதன் ரவிச்சந்திரன்!

Lekha Shree

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

“அமித்ஷா சத்தத்தினால் வெற்றி பெற்றுவிட முடியுமா?” – பிரசாந்த் கிஷோர்

Shanmugapriya