தமிழகம்: ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, “அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

Also Read  வழக்கறிஞர்கள் போராட்டங்களில் பங்கேற்க நீதிமன்றம் நிபந்தனை

ஜனவரி 1ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். ஜனவரி 2ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

Also Read  தி.நகர்,ரெங்கநாதன் தெருவில் கடைகளை திறக்க அனுமதியில்லை- சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும்.

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பை விட வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

Also Read  தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ATM-ல் கொள்ளையடித்த வங்கி ஊழியர் – சிக்கியது இப்படித்தான்!

Lekha Shree

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

ரூ.50க்கு மேல் நன்கொடை வசூலிக்கக் கூடாது – பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு உத்தரவு

sathya suganthi

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு வாய்ப்பு – சென்னையில் வரும் 19-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Tamil Mint

பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Ramya Tamil

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

Tamil Mint

பிரதமர் மோடி-முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நிறைவு…!

Lekha Shree

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Tamil Mint

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.”-தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

“கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க ஏற்பாடு!” – தலைமை தேர்தல் ஆணையர்

Lekha Shree

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi