சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை..!


சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பல இடங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  டிசம்பர் 2-வது வாரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை தத்தளித்தது. அந்த பாதிப்புகளில் இருந்து சற்றே மக்கள் மீண்ட நிலையில், மீண்டும் பெய்து வரும் கனமழையால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Also Read  திமுகவில் உட்கட்சி பூசல்? சிக்கல்களை தீர்க்க உளவுத்துறை அமைப்பு? நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: கொரோனா இருந்து மீண்ட அமைச்சரின் அதிரடி

Tamil Mint

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan

தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

சென்னை மெட்ரோ ரயில் சேவை – புதிய அறிவிப்பு!

Lekha Shree

“சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்?” – மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

Lekha Shree

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்

Shanmugapriya

நாட்டிலேயே முதல்முறையாக 2 அடுக்காக அமையும் மதுரவாயல் சாலை…!

Lekha Shree

கொரோனா 2ம் அலை தீவிரம்… புதிய பரிமாணத்தில் சித்த மருத்துவமனை!

Lekha Shree

வேல் யாத்திரை குறித்து அரசு முடிவு செய்யும்: அமைச்சர்

Tamil Mint

கைலாசா மீது “பயோ வார்” – மர்ம விதைகள் அனுப்பப்பட்டுள்ளதாக நித்தி. பரபரப்பு குற்றச்சாட்டு

sathya suganthi

தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

Lekha Shree

பெரும் எதிர்பார்ப்பில் ஃபோர்டு ஊழியர்கள்…! என்ன செய்யப்போகிறது டாடா நிறுவனம்?

Lekha Shree