சென்னை: ஆசியாவின் முதல் பறக்கும் கார்..! – ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை..!


சென்னையை சேர்ந்த ‘வினதா ஏரோமொபிலிட்டி’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆசியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார் மாதிரியை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

இந்த கார் மாடலுக்கு ‘வினதா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயர்க்காரணம் குறித்து இந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறுகையில், “நிறைய ஆராய்ச்சிகள் செய்து அதற்குப் பிறகே வினதா என பெயர் சூட்டினோம். இதற்கு பறவைகளின் தாயார் என பொருள். துள்ளியமாக கூறினால் கருடனின் தாயார் எனக் கூறலாம்” என தெரிவித்தார்.

அடுத்த இரு ஆண்டுகளில் இந்த பறக்கும் கார் மாடல் ஒரு முன்மாதிரியாக மாறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் கார் மாதிரியில் ஆக்சியல் மோட்டார்கள் மற்றும் உயிரி எரிபொருளில் இயங்கும் ஹைபிரிட் மோட்டார்கள் மற்றும் பேட்டரிகள் உள்ளன.

Also Read  வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

250 கிலோ எடையுடன் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பறக்கும் கார்.

இதனை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “விரைவில் ஆசியாவின் முதல் பறக்கும் கார் ஆக உருவாக இருக்கும் வினதா ஏரோமொபிலிட்டி நிறுவனத்தின் இளம் குழுவினர் உருவாக்கிய ஹைபிரிட் பறக்கும் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது பயன்பாட்டிற்கு வரும்போது மக்களையும் சரக்குகளையும் கொண்டு செல்லவும் மருத்துவ அவசர தேவைகளுக்கும் பயன்படும். வினதா குழுவினருக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  களவர பூமியான டெல்லி... செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிய போராட்டக்காரர்கள்! முழுவிவரம்

இந்தபறக்கும் கார் குறித்து வினதா நிறுவனத்தின் சி.இ.ஓ யோகேஷ் ஐயர் கூறுகையில், “இது இரண்டு இறக்கைகள் கொண்டதாக இருக்கும். செங்குத்தாக கீழே இருந்து மேலே கிளம்பி அதேபோன்று தரையிறங்கும் வசதி கொண்டது.

எந்த இடத்திலும் தரையிறக்கவும் புறப்பட வைக்கவும் முடியும். சமீபத்திய டிரோன் கொள்கைகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. இதன் மூலம் இந்தியா டிரோன்களின் மையமாக மாறும்.

Also Read  முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன் எனக்கூறிய மத்திய அமைச்சர் கைது..!

எங்களது தயாரிப்பு இந்தியாவின் சின்னமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் இந்த மாதிரியை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் நமது மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் மூலம் அறிமுகப்படுத்தினோம்.

ஹெலிடெக் எக்ஸ்போவிற்கு பிறகு பறக்கும் காருக்கான சோதனை துவங்கப்படும். 2023ம் ஆண்டுக்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

Lekha Shree

ஒரு மணிநேரத்தில் 12 அசைவ உணவுகளை சாப்பிட்டு புல்லட் பைக்கை அசால்டாக தட்டிச்சென்ற நபர்! புது வித foodie challenge!

Tamil Mint

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

Lekha Shree

இந்தியாவில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆதாரத்துடன் தெரிவித்த செரோ சர்வே!

Tamil Mint

ஆதாருடன் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உங்களுக்கான முக்கிய தகவல்!

Shanmugapriya

ட்ரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் – மத்திய அரசு அனுமதி!

Lekha Shree

இந்தியா: கடும் குளிர், வெப்பத்தால் இவ்வளவு உயிரிழப்புகளா?… ஆய்வில் பகீர் தகவல்..!

Lekha Shree

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டம்…!

Lekha Shree

“இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்பதே சரி!” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree