a

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19வது லீக் த்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்ய தொடக்க வீரர்கள் கெய்க்வாட், டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

9.1 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருந்தபோது ருத்துராஜ் கெய்க்வாட் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து நடையை கட்ட, டு பிளிஸ்சிஸ் அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார்.

அம்பத்தி ராயுடு அதிரடி காட்டினாலும் காயம் காரணமாக சரியாக ஆட முடியாமல் அவுட்டானார்.

பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் முக்கிய விக்கெட்களை எடுத்துக் கொடுக்க சென்னை அணி திணறத் தொடங்கியது.

பின்னர் வந்த தோனி – ஜடேஜா ஜோடி முடிந்தளவு சிங்கில்ஸ்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது.

Also Read  சென்னை - மும்பை இன்று பலப்பரிட்சை!

ஒரே ஓவரில் 37 ரன்கள்
19 ஓவர்கள் வரை சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவர் கடும் சோதனையாக மாறியது. சென்னை அணியை கதறவிட்ட ஹர்ஷல் பட்டேல் டெத் ஓவரை வீசினார். ஜடேஜா முதல் 2 பந்துகளில் சிக்சர் விளாச 3வது பந்து நோபால் ஆக மாறியது. ஃப்ரீ ஹிட் வாய்ப்பையும் சிக்சாக மாற்ற ஒரே ஓவரில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி மற்றும் டபுல்ஸ் எடுத்து 37 ரன்கள் குவித்தார். ஒரே ஓவரில் சென்னை அணியின் ஸ்கொர் மளமளவென உயர 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் குவித்து வலுவான நிலைக்கு சென்னை அணி முன்னேறியது. ஜடேஜா அற்புதமாக விளையாடி 28 பந்துகளில் 62 ரன்களும் தோனி 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பெங்களூரு அணியின் தடுமாற்றம்
விராட் கோலி – படிக்கல் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். படிக்கல் அதிரடியாக ஆட, விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி சென்னை அணிக்கு நெருக்கடி அளித்த இந்த ஜோடி 3வது ஓவரில் பிரிந்தது. கோலி 8 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க படிக்கல் 15 பந்துகளி 34 ரன்கள் விளாசி அவுட்டானார்.

Also Read  குருவை வீழ்த்த புது டெக்னிக் - சொல்கிறார் ரிஷப் பண்ட்!

வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் டி வில்லியர்ஸ் 4 ரன்களிலும் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழக்க காற்று சென்னை பக்கம் பலமாக வீசியது.

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பெங்களூரு அணி கடுமையாக திணறியது. 10 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆர்சிபி முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த டெய்ல் எண்டர்களும் விக்கெட்களை பறிகொடுத்ததால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

Also Read  103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தெறிக்கவிட்ட ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளிப்பட்டியலில் முதலிடம்
சென்னை அணியின் அபாரமான வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணி 2வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை வசப்படுத்தி வந்த பெங்களூரு அணி முதல்முறையாக நடப்பு தொடரில் தோல்வியை தழுவியுள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொல்லார்டை ஒப்பிட்டு தமிழக வீரரை பாராட்டிய அனில் கும்ப்ளே!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: சென்னை அணியில் மூவருக்கு கொரோனா!

Lekha Shree

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் நடராஜன்!

Jaya Thilagan

இனி நான் தான் ஓப்பனர் – கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

Devaraj

வேணும்னு பண்ணல.. மொகாலியில் ஐபிஎல் நடத்தாததற்கு இதுதான் காரணம்! வாய்திறந்த பிசிசிஐ

Jaya Thilagan

“குட்டி கில்லாடி கலரு கண்ணாடி” இணையத்தில் வைரலாகும் சுட்டிகுழந்தை சாம் கரணின் புகைப்படம்!

Jaya Thilagan

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

போர்களமான வான்கடே – வெற்றியை பறித்த சி.எஸ்.கே!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை! வெற்றியை சுவைக்குமா சிஎஸ்கே?

Lekha Shree

யார் யாருக்கு ஐபிஎல் தொடர் ரொம்ப முக்கியம்? ஒரு அலசல் ரிப்போர்ட்..

Jaya Thilagan

10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல – மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

Jaya Thilagan

கொரோனா பரவல் – ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

Lekha Shree