குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு!


முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் MI-17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 14 பேர் பயணித்ததாக கூறப்பட்டது.

Also Read  பொங்கல் பரிசு தொகுப்பு… கூட்டுறவு சங்க பதிவாளர் அதிரடி உத்தரவு..!

அப்போது மதியம் 12:20 மணி அளவில் ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

வெலிங்டன் ராணுவ மையத்தில் இன்று பிற்பகல் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுவதற்காக பிபின் ராவத் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நேரிட்டது.

Also Read  சென்னை: 74 குழந்தைகளுக்கு கொரோனா…!

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் மீட்டனர்.

காயமடைந்தவர்களை வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில், விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியுள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஹெலிகாப்டரில் பயணித்ததாக கூறப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரக்கல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்" என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் இறப்பிற்கு அரசியல் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்த் விரைவில் குணம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

“இது வேற லெவலா இருக்கே!” – ‘Money Heist’ வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்!

Lekha Shree

ஊரக உள்ளட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு..!

Lekha Shree

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

தமிழகம்: 36 மணிநேரத்தில் 2, 512 ரவுடிகள் கைது – டிஜிபி சைலேந்திர பாபு

Lekha Shree

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கொரோனா நிதியுதவி.. எவ்வளவு வழங்கியுள்ளனர் தெரியுமா..?

Ramya Tamil

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

“தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம்” – அர்ஜுன் சம்பத் உறுதி..!

Lekha Shree

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் -மு.க.ஸ்டாலின்

Tamil Mint

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி

suma lekha

“அமைச்சர், துணை முதல்வர் பதவி மேல் எனக்கு ஆசையில்லை” – உதயநிதி ஸ்டாலின்

Lekha Shree