காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை – தத்து எடுத்த 2 தம்பதிகள் உள்பட 7 பேர் கைது


மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது.

இங்கு, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோரை பராமரித்து வந்தனர்.

இங்கு ஒரு வயது ஆண் குழந்தை மாணிக்கத்துடன் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யாவும், 2 வயது மகள் தனத்துடன் பெங்களூரு ஸ்ரீதேவியும் தங்கியிருந்தனர்.

மாணிக்கத்திற்கு உடல்நிலை பாதித்ததாக கூறி இல்ல உரிமையாளர் சிவக்குமார், பொறுப்பாளர் மதர்ஷா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடித்து 15 ஆண்டுகள் குழந்தை இல்லாத மதுரை இஸ்மாயில்புரம் 4வது தெரு நகை கடை உரிமையாளர் கண்ணன் தம்பதிக்கு ரூ.1.50 லட்சத்திற்கு 100 ரூபாய் பத்திரம் எழுதி விற்றனர்.

Also Read  சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

சட்டப்படி தத்து கொடுக்க வேண்டும் என கண்ணன் கேட்டதற்கு, 2 மாதத்தில் அதற்கான ஏற்பாட்டை செய்கிறோம் என சமாளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தையை ரயில்வே ஸ்டேஷனில் கண்டெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை விற்க புரோக்கராக முத்துப்பட்டி ராஜா இருந்துள்ளார். இவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடிநீர் கேன் சப்ளை செய்தவர். இவர் வழியாகத்தான் குழந்தை கை மாறியுள்ளது. இதற்கு கமிஷனாக ராஜா ரூ.50 ஆயிரம் பெற்றார்.

இதற்கிடையே தனது குழந்தை குறித்து கேட்ட ஐஸ்வர்யாவிடம், கொரோனாவால் இறந்துவிட்டதாக கூறி தத்தனேரி சுடுகாட்டிற்கு மதர்ஷா அழைத்துச்சென்று வேறு ஒரு குழந்தையை புதைத்த இடத்தில் இறுதிசடங்கு செய்ய வைத்துள்ளனர்.

Also Read  தீவிரமடையும் கொரோனா - சென்னையில் ஒரே நாளில் 7,149 பேர் பாதிப்பு!

இதற்காக போலி மின்மயான ரசீது, சிகிச்சை பெற்றதற்கான ரசீது போன்றவற்றை சிவக்குமாரும், மதர்ஷாவும் தயாரித்துள்ளனர். இவ்வழக்கில் இருவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கண்ணன், அவரது மனைவி, ராஜா ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், சக்கிமங்கலம் எல்.கே.டி., நகர் பட்டறை தொழிலாளி சகுபர் சாதிக், ராணி தம்பதிக்கு ஸ்ரீதேவியின் மகளை விற்றுள்ளனர். இதற்கு உதவியவர் சொக்கநாதபுரம் செல்வி. இவர் இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்.

இந்த நிலையில்தான், இவ்வழக்கில் சாதிக், ராணியும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தந்து நடவடிக்கைக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளராக இருந்த புதுார் பரசுராம்பட்டி கலைவாணிக்கு தந்த தகவலின்படிதான் குழந்தைகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர்.

Also Read  நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

குழந்தைகளை விற்றதற்கு உடந்தையாக இருந்ததாக அவரும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஆதரவற்றோர் இல்லத்தில் இதுவரை 83 பேர் இறந்துள்ளனர். இதில் ஏதும் முறைகேடு நடந்ததா என இறுதி சடங்கு செய்ததற்கான பதிவேடுகளை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

இல்லத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில், சிவக்குமாரின் மனைவி, மதர்ஷாவின் சகோதரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடக்கிறது என்றும் மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகங்கள் உரிமம் பெற்று இயங்குகின்றனவா என ஆய்வு செய்யப்படும் என்றும் ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

தமிழக அரசுக்கு எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள்

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

கோயில்…மசூதி…சர்ச்…ஆல் டவுண்டிங்கில் சசிகலா…!

Devaraj

அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை சசிகலா தான் தேர்வு செய்வார் – டிடிவி தினகரன்!

Tamil Mint

தமிழக அரசு பள்ளிகளில் அட்மிஷன் தொடங்கியது

Tamil Mint

அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு – எவற்றிற்கெல்லாம் அனுமதி? – முழு விவரம்

sathya suganthi

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

தேவாங்கர் செட்டியார் சங்கக் கூட்டம் – ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவு திரட்டிய மகன்…!

Devaraj

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்!” – நடிகை விந்தியா கடும் விமர்சனம்!

Shanmugapriya

ஆருத்ரா தரிசன விழாவிற்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint