வறுமையால் பெற்ற குழந்தைகளை விற்கும் பெற்றோர்…! ஆப்கானிஸ்தானில் அவலம்…!


வேர்ல்டு விஷன் என்ற அமைப்பு, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க குழந்தைகளை விற்க தயாராக உள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டு மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அதில் மிக முக்கியமானது பொருளாதார நெருக்கடி என்றும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆண்டுகளாக அமெரிக்கா கொடுத்து வந்த ராணுவ பலம், நிதி உதவி என அனைத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தியது.

Also Read  எதுவும் காதலே… அரச அந்தஸ்தை உதறி காதலனை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி..!

இதனால், பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் அனைவரும் கடும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக 5 வயதுக்கு கீழ் உள்ள 32 லட்சம் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆப்கான் மக்கள் தற்போது அவர்களின் குடும்பங்களுக்கு உணவளிக்க தங்கள் குழந்தைகளை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Also Read  தலிபான் அரசின் புதிய பிரதமராக முல்லா ஹசன் தேர்வு…

ஆப்கானில் வாசிக்கும் ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு கூட தெரிவிக்காமல் 10 வயது பெண் குழந்தையை ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக விற்று பணம் பெற்றுள்ளார்.

அதன் மூலம் அவரின் மற்ற 5 குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் உணவு அளித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானிலிருந்து நாளுக்கு நாள் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாகவும் அதில் அதிக பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைகள்தான் எனவும் வேர்ல்டு விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read  பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.... இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்...

இந்த நிலையில் இருந்து மக்களை மீட்க நிதியுதவிகள் மிகவும் அவசியம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காற்றின் மூலம் கருவுற்று குழந்தைப் பேறு – மாயாஜால கதை கூறும் இளம் பெண்

Bhuvaneshwari Velmurugan

அண்டார்டிகாவால் உலகிற்கு காத்திருக்கும் கண்டம் – 10,000 ஆண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி பாறைகள்

sathya suganthi

Squid Game வெப்தொடரால் பயனடைந்துள்ள நெட்பிளிக்ஸ்..! உலகளவில் பெருகும் வரவேற்பு!

Lekha Shree

அமெரிக்க ஆயுதங்களுடன் நவீன உடைகளில் தாலிபான் ராணுவம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Lekha Shree

இஸ்ரேல்: முடிவுக்கு வந்த பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் – பிரதமரான நப்தலி பென்னட்…!

sathya suganthi

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

“இங்கு இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது” – அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு!

Lekha Shree

ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின நடிகர் சிட்னி போய்ட்டியர் காலமானார்…!

Lekha Shree

இரு நாடுகளும் அமைதியுடன் இணைந்து வாழ விருப்பம் – சீன அதிபர்..!

suma lekha

வரலாற்றில் முதல் முறை – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக 2 வது முறையாக பதிவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

Tamil Mint

’பாராலிம்பிக்கில் பங்கேற்க உதவுங்கள்’ – ஆப்கானிஸ்தான் வீராங்கனை வேண்டுகோள்!

suma lekha