சிலி: முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்ததால் அதிபருக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம்!


சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பீன்யேரா, கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைக் கடைபிடிக்காமல் செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததால் அவருக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 2.57 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பீன்யேரா எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அவர் முகக் கவசம் அணியவில்லை. அதையடுத்து இந்தப் படம், டிசம்பர் மாத தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர், பீன்யேரா முகக்கவசம் அணியாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

Also Read  வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

சிலி நாட்டில், பொது வெளியில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. இந்த முகக் கவச விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை கூட வழங்கப்படலாம். 

சான்டியகோவில் கொரோனா வைரஸுக்கான கட்டுப்பாடுகள் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, சிலி நாட்டில், நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

Also Read  பிரேசிலில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாக உயிரிழக்கும் குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த டிசம்பர் மாதத்தில், பீன்யேரா அவசர கால நிலையை 90 நாட்களுக்கு நீட்டித்தார். அரசின் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க இது வழிவகை செய்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக பணக்காரர்கள் பட்டியல்: அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய Louis Vuitton ஓனர்

sathya suganthi

துபாயில் நிர்வாண படப் பிடிப்பில் ஈடுபட்ட 12 யுக்ரேனிய பெண்கள்… UAE அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

Devaraj

ரூ. 2 கோடி மதிப்பிலான ஆரஞ்சு முத்தை கண்டெடுத்த நபர்! – ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டம்!

Tamil Mint

வீட்டு வாசலில் படுத்திருந்த 9 அடி ராட்சத முதலை – வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

அமெரிக்கா வெளியேற்பும்.. தலிபான் ஆக்கிரமிப்பும்.. சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான்..!

suma lekha

4ஆம் தலைமுறை வாரிசுகளுடன் எலிசெபத் II மற்றும் பிலிப்…! – இத்தனை கொள்ளுப் பேரக் குழந்தைகளா…!

Devaraj

மாஸ்க் அணிந்தார் டிரம்ப்

Tamil Mint

யூடியூபில் வர உள்ள புதிய அப்டேட்! – பயனர்கள் குஷி!

Shanmugapriya

28 பேருடன் ரஷ்ய விமானம் மாயம்…!

sathya suganthi

இன்று புலிகள் தினம், நீங்களும் இதை செய்யலாமே…

Tamil Mint

துருக்கியில் பற்றியெரியும் காட்டுத்தீ… கட்டுக்கடங்காத தீயில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi