a

சீனா: உருமாறிய வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் மனிதர்..!


பறவைக் காய்ச்சலின் புதிய வேரியண்டால் சீனாவில் முதன்முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனாவின் கோரத்தாண்டவமே இன்னும் முடியாத நிலையில் தற்போது அதே சீனாவில் உருமாறிய பறவை காய்ச்சலால் முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

செஞ்சியாங் நகரைச் சேர்ந்த 41 வயது நபருக்கு பல்வேறு அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கடந்த மே 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு H10N3 வகை பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்தது. எனினும் அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ்செய்யப்படுவார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Also Read  சீனாவில் 100 சதவீதம் வறுமை ஒழிந்துவிட்டது! - அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு

அவருடைய நெருங்கிய தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு கோழி அல்லது வேறு ஏதேனும் விலங்கின பண்ணையிலிருந்து தொற்று பரவி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Also Read  கொரோனா 2ம் அலை - கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியல் இதோ..!

உலகிலேயே முதல் முறையாக பறவை காய்ச்சலால் 1997ஆம் ஆண்டு ஹாங்காங்கில் மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.

பின்னர் H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர். சீனாவில் எண்ணற்ற பறவை காய்ச்சல் வகைகள் இருப்பதாகவும் அதில் H7N9 வகை வேரியன்ட் பாதிப்பால் கடந்த 2016-17ம் ஆண்டில் 300 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க உதவும் நாய்கள்…!

இதன் பிறகு அதிக அளவில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதாக தகவல் இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் H5N8 வகை பறவை காய்ச்சலால் முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுப்பூசி எடுத்துக் கொண்ட 94 வயதாகும் இங்கிலாந்து ராணி! உடல்நலம் குறித்து வெளியான தகவல்!

Tamil Mint

லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் – அமெரிக்க ஆய்வில் தகவல்

sathya suganthi

கொரோனா இறப்புகளை தடுப்பதில் ரெம்டெசிவர் மருந்து தோல்வி: உலக சுகாதார அமைப்பு.

Tamil Mint

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தற்போதைய நிலவரம்

Tamil Mint

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

கணவன் மறைவு குறித்து ராணி இரண்டாம் எலிசெபத் கூறியது என்ன தெரியுமா…?

Devaraj

ஐபோன் என நினைத்து ஐபோன் போன்று இருக்கும் மேஜையை ஆர்டர் செய்த சிறுவன்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya

காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் – நடந்தது என்ன?

Lekha Shree

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் அமெரிக்கத் தேர்தல்

Tamil Mint

ராணுவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க அமெரிக்கா தாயார்..

VIGNESH PERUMAL

பெற்ற தாயை கொன்று சமைத்து உண்ட கொடூரன்…! ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்…!

Devaraj