மிதக்கும் சீனா – அழிவை ஏற்படுத்திய ஒரு மணிநேர மழை…!


சீனாவின் க்ஹெனான் மாகாணத்தில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளம் சுரங்க ரயில் பாதையில் ஓடியதால் அந்த வழியாக வந்த மெட்ரோ ரயிலுக்கும் நீர் புகுந்து.

இதன்காரணமாக 12 பேர் பலியானார்கள். அங்குள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து 500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

நாள்கணக்கில் பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் இந்த நகரை புரட்டிப் போட்டுவிட்டது. அந்த மாகாணத்தின் பல நகரங்களில் வீடுதோறும் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது.

பல இடங்களில் பாதையில் சென்றவர்கள் மீட்கப்படும் காணொளிகள் சமூக ஊடகங்கள் பகிரப்பட்டுள்ளன. இதுவரைக்ஹெனான் மாகாணத்தில் 25 பேர் இறந்துள்ளதாகவும் குறைந்தபட்சம் 12 நகரங்கள் ஆவது வெள்ளத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  அழியாத மனிதநேயம் - ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகையில், “க்ஹெனான் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு அணைகள் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை கடந்து நிரம்பி வழிகின்றன.

Also Read  கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து..!

பல இடங்களில் அணைக்கட்டு உடைந்ததால் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை திருப்பிவிடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த மாகாணத்திற்கு ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாகாண தலைநகரான ஜங்ஜெள நகரில் வருடம் முழுவதும் பொழிந்திருக்க வேண்டிய மழை வெறும் மூன்றே நாட்களில் கொட்டித்தீர்த்தது.

தற்போதைய மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆறு மற்றும் குளங்களை இணைக்கும் நீர்வழி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் கோடை மழையை உள்வாங்கிக்கொள்ளும் வடிகாலாக இதுநாள் வரை இருந்தன.

Also Read  ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் - 168 பேர் பலி!

இந்த நகரில் உள்ள மருத்துவமனையில் கனமழை காரணமாக மின்சாரம் சில நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் மட்டும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 600 நோயாளிகள் இருந்தனர்.

மின்வெட்டு காரணமாக அந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நகரில் மின்சாரம், தண்ணீர், இன்டர்நெட் வசதி எதுவும் இல்லை. மேலும், அந்த நகர வாசிகள் இதுவரை அவர்களது வாழ்நாளில் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை சந்தித்தது இல்லை என தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் திட்டம் – 51 செயற்கோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ள எலான் மஸ்க்..!

Lekha Shree

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

பாஸ்போர்ட்க்கு பதிலாக ஸ்கேனிங் முறை – துபாய் விமான நிலையத்தில் அறிமுகம்

Jaya Thilagan

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இஸ்ரேல்: முடிவுக்கு வந்த பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் – பிரதமரான நப்தலி பென்னட்…!

sathya suganthi

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே 3வது இரவாக மோதல்

sathya suganthi

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

இந்தியாவை நெருங்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் – 10 ஆண்டுகளில் இல்லாத அளவு காட்டுத்தீ…!

Devaraj

6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகலாம்- எலான் மஸ்க்

Tamil Mint

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு

Tamil Mint