சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆய்வு நிறுவனமான லோவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாடினார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 

அப்பொழுது அவர், “சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் உறவுநிலை பழைய பாதைக்கு திரும்புவது பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஒப்பந்தங்களை சீனா மதிப்பதில்லை. இந்தியா – சீனா எல்லை பிரச்னை ஏற்பட்டு 8 மாதங்களாகியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகள் அடிப்படை பிரச்சினையை தீர்க்கத் தவறிவிட்டன” என கூறினார். 

Also Read  இறப்பில் இணைந்த காதலர்கள்… கல்லறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

மேலும் “கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவுடனான நமது உறவு மிகக் மோசமான கட்டத்தில் உள்ளது. ஒப்பந்தங்களை மீறி லடாக் எல்லைக்கு ஆயிரக்கணக்கான வீரர்களைக் முழு தயாரிப்புடன் சீனா கொண்டு வந்தது. இதுவே இரு தரப்பு உறவை மோசமாக பாதிக்க காரணம். இரு படையினரும் நெருக்கமாக இருந்ததால் மோதல் ஏற்பட்டது. தற்போது இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு பிரச்னையாக இல்லை. ஆனாலும் உறவை பழைய பாதைக்கு திருப்புவது மிகப் பெரிய பிரச்சினை” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசினேன். மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்தேன். பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் தூதர்கள் இடையே சந்திப்புகளும், பேச்சுவார்தைகளும் நடந்தன. ஆனாலும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை அவர்கள் மதிப்பதில்லை”. என கூறினார்.

Also Read  நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் - சிறப்பு என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைப்பது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்

Tamil Mint

“வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள்” – நடிகர் மோகன்லால் ட்வீட்

Shanmugapriya

கொரோனா 2ம் அலைக்கு 269 மருத்துவர்கள் பலி…! ஐ.எம்.ஏ வெளியிட்ட ரிப்போர்ட்..!

Lekha Shree

படிப்புக்காக உணவு டெலிவரி செய்யும் இளம்பெண்!

Shanmugapriya

இத எதிர்பார்க்கவே இல்லையே! – சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

Shanmugapriya

இந்தியா: உருமாறிய கொரோனாவால் மேலும் 4 பேர் பாதிப்பு!!

Tamil Mint

விஸ்மயா விவகார எதிரொலி : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

இந்தியா: ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

sathya suganthi

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!

Shanmugapriya

சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

Tamil Mint