சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா! – 40 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் முடக்கம்!


சீனாவில் டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஷு நகர் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வரும் நிலையில், சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகம் பரவ தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  சமீபத்திய ஆய்வொன்றில், பெண்களை விட, ஆண்களே கொரோனாவால் பலியாகும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது.

இதனால், அண்டை நாடுகள் கவலையை அடைந்துள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பிற மாகாணங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது .

Also Read  கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

சீனாவில் சுற்றுலா தலங்களை உடனடியாக மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஷு நகர் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷு நகரைவிட்டு மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களில் டெல்டா வகை கொரோனா பெரிய அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  புகலிடம் தேடிச் சென்ற அகதிகள் கடலில் மூழ்கி பலி…! 43 பேர் உயிரிழந்ததாக தகவல்…!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை…!

Devaraj

ஜெர்மனி: முடிவுக்கு வரும் 16 ஆண்டுகால ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி…!

Lekha Shree

டிக்டாக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தை சீனா ஏற்க வாய்ப்பில்லை- சீன அரசு பத்திரிக்கை தகவல்

Tamil Mint

துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி

Tamil Mint

ஒருமுறை பார்த்தவுடன் மெசஜ் மறைந்துவிடும் – வாட்ஸ் ஆப்பில் புது முயற்சி

sathya suganthi

ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்! கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை!

Tamil Mint

இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திய தாலிபான்கள்…!

Lekha Shree

இளைஞர் சைக்கிள் சாகசம்… 30 நிமிடங்களில் 33 மாடிகள் ஏறி அசத்தல்! வைரல் வீடியோ இதோ!

Tamil Mint

“736 மில்லியன் பெண்கள் ஒருமுறையாவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Lekha Shree

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் ‘மாஸ்’ காட்டிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்…!

Lekha Shree

தமிழக பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் …! பின்னணி என்ன?

Lekha Shree