a

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியர்களால் பரவியதா என சந்தேகிக்கும் அரசு


உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ், சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா என வல்லரசு நாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ள இந்த கொரோனா வைரஸ், பல பரிணாமங்களில் இன்னும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் கொரோனா வைரசின் ஊற்றாக கருதப்படும் சீனாவில், நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்நாட்டின் தெற்கு மாகாணத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ நகர், கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  தொடர்ந்து 5வது மாதமாக ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வசூல்

1.5 கோடி மக்கள் வசிக்கும் இந்த நகரரில் கொரோனா பரிசோதனை செய்த போது, 20 பேருக்கு புதிதாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணத்தில் இருந்து மற்ற மாகாணங்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு, காணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.

Also Read  வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

சுகாதாரத் துறையின் பரிசோதனை முடியும் வரை இந்த மாகாணத்திலிருந்து குடிமக்கள் யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை என தெரிவித்துள்ள அரசு, இந்தியாவில் இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ யாராவது வந்து புதிய வகைப் வைரஸை பரப்பிச் சென்று உள்ளனரா என்று அந்நாட்டு அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கஞ்சா கடத்தியதாக புகார்! – பூனையை கைதுசெய்த காவலர்கள்

Shanmugapriya

50 ஆண்டுகளில் காணாத வெள்ளம்! – தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

Devaraj

வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! – வியப்பில் மக்கள்!

Lekha Shree

சிலைக்கு மாஸ்க் அணிவித்த ஜப்பானியர்கள்…!

Lekha Shree

கொரோனா எங்கிருந்து பரவியது? – 90 நாட்களுக்குள் கண்டுபிடிக்க பைடன் உத்தரவு!

Shanmugapriya

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

விஸ்வரூபம் எடுக்கும் நைஜீரியா மாணவிகள் கடத்தல் விவகாரம்! உடனடியாக விடுவிக்கப்பட ஐ.நா. வலியுறுத்தல்!

Lekha Shree

பிரதமர் மோடி பயணத்தால் கலவரப்பூமியான வங்கதேசம் – கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்

Devaraj

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

இன்று உலக பிரா அணியாத தினம்,

Tamil Mint