சீனாவில் ட்ரெண்டாகும் ‘சிக்கன் பேரண்டிங்’…! அப்படியென்றால் என்ன?


சீனாவில் ‘சிக்கன் பேரண்டிங்’ என்ற முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. குழந்தைகள் வளர்ப்பில் அக்கறை கொண்டிருக்கும் சீனர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தத்தை செலுத்துகின்றனர்.

இந்த முறைக்கு தான் ‘சிக்கன் பேரண்டிங்’ என பெயர் வைத்துள்ளனர். இப்படி கோழி ரத்தத்தை குழந்தைகளுக்கு செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும் எனவும் புற்றுநோய், வழுக்கை, குழந்தையின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

Also Read  சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் - நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

இந்த கோழி ரத்த ஸ்டீராய்டுகள் செலுத்தப்படுவதால் குழந்தைகளிடையே ஹைப்பர்ஆக்டிவிட்டி அதிகரிக்கிறதாம். இதனால் குழந்தைகள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என கூறுகின்றனர்.

குழந்தைகளை சூப்பர் குழந்தைகளாக மாற்ற இந்த முறையை சீனர்கள் கையாள்வதாகவும் தற்போது இந்த முறை பீஜிங், ஷாங்காய், குவாங்சோ நகரங்களில் அதிகமாக பிரபலம் அடைந்து வருவதாகவும் சிங்கப்பூர் போஸ்ட் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் திடீர் புகை!

மேலும், சீனாவின் ‘சிக்கன் பேரண்டிங்’ அமெரிக்காவின் ஹெலிகாப்டர் பேரண்டிங் முறைக்கு ஒப்பாகும் எனவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் சிக்கன் பேரண்டிங் பிரபலம் அடைந்து வரும் அதே நேரத்தில் சூப் சீனா என்ற செய்தி நிறுவனம், பெரும்பாலான குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மன அழுத்தத்தில் தவிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஏன் இந்த மௌனம்?” – ஆப்கான் பெண் இயக்குனரின் பதிவை பகிர்ந்த அனுராக் கஷ்யப்…!

Lekha Shree

கண் தெரியாத நரிக்கு வழிகாட்டியாக மாறிய கால்களை இழந்த நாய்! – வீடியோ

Shanmugapriya

காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு… தாலிபான்கள் கண்டனம்..!

suma lekha

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

சிவப்பு பட்டியலில் இந்தியா….!

Devaraj

இது புதுசா இருக்கே! – இணையத்தில் ட்ரெண்டாகும் நீல நிற வாழைப்பழம்!

Shanmugapriya

கோடை காலத்தில் கேசத்தை பராமரிக்க உதவும் 4 வகை எண்ணெய்கள்…!

Lekha Shree

கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார நிறுவனம்

Shanmugapriya

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

Tamil Mint

இலங்கை டான் கோவையில் மரணம்: விஷம் கொடுத்து கொன்றாரா காதலி?

Tamil Mint

“Maggi Noodles” உடலுக்கு கேடு – ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் “Nestle”

sathya suganthi

தடுப்பூசி போடலனா வேலை இல்லை : பாகிஸ்தான் அரசு அதிரடி.!

suma lekha