a

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் ‘என்னை அறிந்தால்’.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் வரும் அஜித்-த்ரிஷா காட்சிகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Also Read  பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

அஜித் தனது பாணியில் இருந்து மாறுபட்டு நடித்த படம் இது என்று கூறலாம். அவரது பாடி லேங்குவேஜ், ஸ்டைல், வசனங்கள் கூறும் விதம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருப்பார். மேலும், இப்படம் நடிகர் அருண் விஜய்க்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read  17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

மேலும், அஜீத் நடித்த வேடத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இந்த படத்தை சுஜித் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் சுஜித் ஏற்கனவே பிரபாஸ் நடித்த சாஹோ என்ற படத்தை இயக்கியவர். சிரஞ்சீவி தற்போது ‘ஆச்சார்யா’ படத்தை முடித்துவிட்டு ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Also Read  "ஒருவேளை இருக்குமோ" - இணையத்தை கலக்கும் ஜித்து ஜோசப் குடும்ப புகைப்படம்!

இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ‘என்னை அறிந்தால்’ ரீமேக் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘டாக்டர்’ பட புது ரிலீஸ் தேதி இதுதான்… அத்துடன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை…!

malar

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

கொரோனாவால் ‘தொரட்டி’ பட கதாநாயகன் ஷமன் மித்ரு உயிரிழப்பு…!

sathya suganthi

ஜெயம் ரவியை நம்பி அந்தரத்தில் சிக்கி தவிக்கும் இயக்குனர்…..

VIGNESH PERUMAL

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

ஹெலிகாப்டரில் வந்த கமல்… பார்க்க குவிந்த மக்கள்!

HariHara Suthan

பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்! – எதற்காக தெரியுமா?

Shanmugapriya

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Lekha Shree

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை நக்மாவுக்கு மீண்டும் கொரோனா!

Shanmugapriya