தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது


தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது கன்னத்தில் ஏற்பட்ட கீறல், சித்ராவின் நகக்கீறல்கள்தான் என்று பிபிசி தமிழ் கூறியுள்ளது. 

இதற்கிடையே, சித்ராவின் உடல், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் உடல்கூராய்வு முடிந்து பிற்பகலில் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அப்போது அவரது உடலை பார்த்து கதறி அழுத சித்ராவின் தாயார் விஜயா, “எனது மகளை அடித்துக் கொன்று விட்டார்கள். அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல” என்று தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஹேமந் தைபதிவுத்திருமணம் செய்து கொண்ட சித்ரா, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முறைப்படி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

Also Read  கடலூர்: திடீரென வெடித்து சிதறிய வீட்டு உபயோகப் பொருட்கள்… காரணம் இதுதான்..!

ஹேமந்துக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும் அவர் பல இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் சித்ராவின் அஞ்சலி நிகழ்வுக்கு வந்த அவரது பல நண்பர்களும் தெரிவித்தனர்.

நடிகை சித்ராவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரு வாரங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் பதிவுத்திருமணம் நடந்ததாக கூறப்பட்டதையடுத்து, புதன்கிழமை அதிகாலையில் சித்ரா உயிரிழந்த சம்பவத்தை வருவாய் கோட்டாட்சியர் விசாரித்தார்.

Also Read  அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை - ஆளுநர்

இதற்கிடையே, சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் கூராய்வு பரிசோதனை, வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரமாக நடந்த இந்த பிரேத பரசோதனையின் முடிவில், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது மரணம் தொடர்பாக ஏற்கெனவே சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிய வந்துள்ளதால், அவரை தற்கொலைக்கு தூண்டியது யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Also Read  அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப்பொருள்…! விசாரணையில் தெரியவந்த உண்மை…!

sathya suganthi

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

Lekha Shree

வாக்குச் சேகரிப்புக்கு அலைக்கழிக்கப்பட்ட விஜயகாந்த் – ஓட்டு போட வராதது ஏன்…?

Devaraj

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Ramya Tamil

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்! – ஓபிஎஸ் வரவேற்பு..!

Lekha Shree

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறையினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Tamil Mint

எம்.பி.ஜெகத்ரட்சகன் ஹவாலா பண பரிமாற்றம் செய்தாரா?

Tamil Mint

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !?

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்க பரிந்துரை..!

Lekha Shree