இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு… தர்மசாலாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் வட மாநிலங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் மற்றும் பலத்த மழையில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read  செக்யூரிட்டி டூ ஐஐம் பேராசிரியர்! - வறுமையை வென்றெடுத்து சாதித்த இளைஞர்!

இதை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்திலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுள்ளது.

இதில் கட்டிடங்கள், வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாப்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Also Read  விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி நடைபெறும்: நரேந்திர சிங் தோமர்

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கனமழையால் இமாசலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாநில அரசுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். சாத்தியமுள்ள அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

Tamil Mint

கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் ரத்தமா? மத்திய அரசு விளக்கம்…!

sathya suganthi

2 மாமரங்களை பாதுகாக்க 4 காவலாளிகள், 6 நாய்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

உக்கிரம் காட்டும் கொரோனா…! 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு…!

Devaraj

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

Ramya Tamil

அச்சுறுத்த தயாராகும் “டெல்டா பிளஸ்” கொரோனா – புதிதாக கண்டுபிடிப்பு…!

sathya suganthi

வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! – கரண்ட் பில்லோ ரூ. 12,500!

Shanmugapriya

ஒரே அமர்வில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

தொடர் கனமழையால் பீகாரின் பல மருத்துவமனைகளில் புகுந்த வெள்ளம்!

Shanmugapriya

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree