CLUBHOUSE பயனர்களின் விவரங்கள் DARK WEB-ல் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்..!


கிளப்ஹவுஸில் உள்ள 3.8 பில்லியன் பயனர்களின் விவரங்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனையாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் உள்ள இணையவாசிகளுக்கு கிளப்ஹவுஸ் செயலி புது வரவு. பல இளைஞர்களின் கவனத்தை இந்த செயலி ஈர்த்து வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு இந்த செயலி அறிமுகமானாலும் சமீபத்தில் தான் இந்தியாவுக்கு அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது.

வழக்கமாக சமூக வலைத்தளங்கள் என்றால் வீடியோ, போட்டோ மற்றும் எழுத்து பதிவுகள் என சில வசதிகள் இருக்கும். ஆனால், இந்த நடைமுறையை மாற்றி உள்ளது கிளப்ஹவுஸ் செயலி.

Also Read  கோலி-அனுஷ்காவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தாஜ் ஹோட்டல்…! வைரலாகும் புகைப்படம்..!

இந்த செயலியில் சுயவிவரங்களை ப்ரொபைலில் மட்டுமே வைத்துக்கொள்ளும் வசதி, லைவ் ஆடியோ போன்ற வசதிகள் உள்ளது. மேலும், இதுவரை எந்த செயலியிலும்இல்லாத ஒரே நேரத்தில் 5,000 பேர் பேசும் வசதியை இந்த செயலி கொண்டுள்ளது.

சமீபத்தில் ட்விட்டரில் ‘ட்விட்டர் ஸ்பேஸ்’ என்ற வசதி ட்ரெண்டானது. இப்போது அதற்கு போட்டியாக கிளப் ஹவுஸ் களமிறங்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளரும் இந்திய அமெரிக்கருமான ரோஹன் சேத் மற்றும் ‘ஹைலைட்’ என்னும் செயலியை உருவாக்கிய பால் டேவிசன் ஆகிய இருவரும் இணைந்து இந்த கிளப் ஹவுஸ் செயலியை உருவாக்கினர்.

இப்படி பல அற்புதமான வசதிகள் இந்த செயலியில் இருந்தாலும் இதை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக முன்வைக்கப்படுகிறது.

Also Read  "அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்" - ராகுல் காந்தி

இந்நிலையில் தான் கிளப்ஹவுஸில் உள்ள 3.8 பில்லியன் பயனர்களின் விவரங்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனையாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை முன்னணி இணைய பாதுகாப்பு நிபுணர் ஜிதன் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Also Read  நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி செயலி! ஆன்லைன் கேம் பிரியர்கள் கொண்டாட்டம்!

அதில், “கிளப் ஹவுஸ் பயனர்களின் தொலைபேசியில் உள்ளவர்களின் போன் நம்பர்களும் இதில் உள்ளது. நீங்கள் இந்த செயலியில் இல்லாவிட்டாலும் உங்களின் நம்பரும் பட்டியலிடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஆனால், கிளப் ஹவுஸ் நிர்வாகம் இதை மறுத்துள்ளது. இருப்பினும் இந்த செயலியின் பயனர்களின் மத்தியில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும் கலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

தமிழகத்தை நெருங்கிய கறுப்பு பூஞ்சை நோய்…! ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு…!

sathya suganthi

இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு அடித்த குடும்பத்தினர்…! வைரல் வீடியோ!

Lekha Shree

இந்தியா: வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்…! அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியல் இதோ..!

Lekha Shree

“பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு வரி வசூலில் தீவிரம் காட்டுகிறது” – ராகுல் காந்தி

Tamil Mint

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

இந்தியாவில் பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா! – எந்தளவிற்கு ஆபத்து?

Lekha Shree

ஆக்சிஜன் சிலிண்டர் களுடன் ஆட்டோ! – கொரோனா நோயாளிகளுக்கு உதவ டெல்லியில் அசத்தல்!

Shanmugapriya

வாட்ஸ் ஆப் மீது சட்ட நடவடிக்கை – மத்திய எச்சரிக்கை

sathya suganthi

சேலை உடுத்தி இளைஞர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பெருகும் ஆதரவு! – காரணம் தெரியுமா?

Lekha Shree