மதியால் கோவிட்டை வெல்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பேசி உள்ளதன் முழு விவரம் இதோ…!

கோவிட் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு 4 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தில் மருத்துவ கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகிய 4 காரணங்களினால், இந்தளவு வெற்றியை பெற முடிந்தது.

இன்றைய தகவல் அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியு படுக்கைகள் ஆகியவை ஏராளமாக தயாராக உள்ளது.

எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழக மக்களுக்கும் உண்டு என்ற நம்பிக்கை உள்ளது.

கோவிட்டை கட்டுப்படுத்திவிட்டோம் என கூறலாமே தவிர, முழுமையாக ஒழிக்கவில்லை என மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.

தளர்வுகளை அறிவித்ததால், விதிமுறைகளை பின்பற்ற தேவையில்லை என நினைக்கக்கூடாது.

பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்படவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்காமல் இருப்பதன் காரணத்தை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடைகள், முக்கிய சேவைகள், உணவகம், அரசு மற்றும் தனியார் அலுவலகம், பொது போக்குவரத்து ஆகியவை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அனுமதி தரப்பட்டது.

ஊரடங்கினால், மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு, அவசியமான பொருளை வாங்குவதில் சிரமம், மாநில பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்படுகிறது. இந்த 3 காரணங்களினால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தான் மிகப்பெரிய ஆயுதம். கேடயம். மக்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை.

மத்திய அரசும் முழுமையாக வழங்கவில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நிபுணர்கள் அனுமதி வழங்கவில்லை. ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்ற அரசு தயார் நிலையில் உள்ளது.

முழுமையாக தடுப்பூசி கிடைக்காத நிலையில் கூடுதல் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும். மக்கள், தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்து கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அவசியமான காரணங்களுக்கு மட்டும் வெளியே வாருங்கள். அப்படி வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்த்து வரிசையில் நிற்க வேண்டும். அப்போதும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.

பொது இடங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

கடை நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதுடன், ஒரே நேரத்தில் அதிக ஆட்களை கடைக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

சுய மருத்துவம் பார்க்கக்கூடாது. இதனை பின்பற்றினால், கோவிட்டை தடுக்கலாம். பாதிப்ப ஏற்படாது. இது அரசின் கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள்,தாங்களுக்கு தாங்களே போட்டு கொள்ளும் சுயகட்டுப்பாடுகளாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதரும் தாங்களே காவல் அரணாக இருக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறினால் 3வது அலை வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தால் எந்த அலையும் வராது. தளர்வுகளை பயன்படுத்தி, விதிமுறைகளை மீற வேண்டாம்.

விதிமுறைகளை பின்பற்றி, மதியால் கோவிட்டை வெல்வோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read  மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை…? தலைமைச் செயலகத்தில் நடந்த டீலிங்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மோடியிடம் கேள்வி கேட்க எடப்பாடிக்கு தைரியமில்லை” – ராகுல் காந்தி

Shanmugapriya

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை

sathya suganthi

மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

Jaya Thilagan

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

Tamil Mint

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

தங்கள் தொகுதியில் மட்டும் அனல்பறக்க பிரச்சாரம் செய்யும் அமைச்சர்கள்…!

Devaraj

நடிகர் விவேக்கின் கனவுக்கு கைக்கொடுப்போம்… வாருங்கள்…! தமிழ் மின்ட்டின் புது முயற்சி…!

Devaraj

தடையை மீறி சென்னையில் ஸ்டாலின் உண்ணாவிரதம் !!

Tamil Mint

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Tamil Mint

தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

sathya suganthi

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்

Devaraj