a

முகத்தை பொலிவாக்கும் 3 சிம்பிள் ஃபேஸ் பேக்!


முகப்பொலிவிற்காக பியூட்டி பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்தும், கடைகளில் பல நூறு கொடுத்து ஃபேஸ் மாஸ்க் வாங்கியும் முகத்தை பொலிவாக்க முயற்சி செய்திருப்போம்.

ஆனால் வீட்டிலேயே செலவு இல்லாமல் காஃபி பவுடரை கொண்டு சுலபமான வழியில் ஃபேஸ் மாஸ்க் செய்து பலன் பெறலாம். காஃபி பவுடர் முகத்தில் உள்ள கருமையை நீக்கி பொலிவு தரும்.

காஃபி வித் பால்

காஃபி பவுடர் ஒரு ஸ்பூன் மற்றும் 2 ஸ்பூன் பாலை ஒரு கப்பில் கலக்க வேண்டும். பேஸ்ட் போல ஆனதும் அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவிய பின் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

Also Read  குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 உணவுகள்..!

அதன்பின் குளிர்ந்த நீரில் 2 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே முகத்தை கழுவ வேண்டும்.

வாரம் இரண்டு முறை இதை பயன்படுத்தலாம். இது நமது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, பொலிவை தரும். முகத்தை பளபளக்க வைக்க காஃபி பவுடர் பெரிதும் உதவும்.

Also Read  உடல் எடையை குறைக்க வேண்டுமா? - இந்த 2 பொருட்கள் போதும்!

காஃபி பவுடர் வித் தேங்காய் எண்ணெய்

இரண்டு ஸ்பூன் காஃபி பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம்.

வாரம் இரண்டு முறை இந்த மாஸ்க் போட வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் நம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும். வயதான தோற்றத்தை கொடுக்காமல் இளமையாக வைத்துக்கொள்ள உதவும். டெட் செல்களை நீக்கும்.

காஃபி வித் லெமன்

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்த தீர்வு தரும். ஒரு ஸ்பூன் காஃபி பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் லெமனை நன்றாக கப்பில் கலக்கி எடுத்தால் சுலபமாக 2 நிமிடங்களில் ஃபேஸ் பேக் தயார்.

Also Read  கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பேஸ்பேக்குகள்…!

வாரம் ஒருமுறை இதை பயன்படுத்தலாம். லெமனில் உள்ள வைட்டமின் சி மற்றும் காஃபியில் உள்ள லைட்டனிங் எலிமெண்ட்ஸ் சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கும். சருமத்தை மென்மையாக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீண்ட கால மூக்கடைப்பு பிரச்சனைக்கு இனி இது தான் நிவாரணம்…!

Lekha Shree

கொரோனாவின் கடும் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சி! முழு விவரம் இதோ..!

Lekha Shree

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பேஸ்பேக்குகள்…!

Lekha Shree

கோடை காலத்து சரும பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் இதோ…!

Lekha Shree

கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!

Lekha Shree

முகப்பரு நீங்க இந்த ஒரு பொருள் போதும்…!

Lekha Shree

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan

கொரோனா தீவிரமாக இருக்கும் சமயம் அசைவ உணவுகளை சாப்பிடலாமா?

Lekha Shree

உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவுகள்!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

வெயிட் லாஸ் செய்ய சிறந்த 5 காலை உணவுகள்!

Lekha Shree

ஆரஞ்ச் பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Lekha Shree