மிதுன் மனைவியுடன் உயிரிழந்த மாணவி பேசியது என்ன? வெளியான அதிர்ச்சி ஆடியோ!


மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி உயிரிழந்த மாணவியுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் 17வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் பயின்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய மிதுன் சக்ரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லையால் தான் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மிதுன் போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மிதுன் பற்றி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி உயிரிழந்த மாணவியுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், “எதற்கு மிதுனுக்கு அடிக்கடி hi hi என மெசேஜ் செய்கிறாய். ஒரு ஆசிரியருக்கு இப்படி மெஜேஜ் செய்வது சரியா? என்று கேட்கிறார். உடனே அந்த மாணவி அழுதுகொண்டே, “அவர் தான் கிஸ் செய்வது பற்றி பேசினார்” என்று சொல்கிறார்.

Also Read  ரஜினியை சந்தித்த முதல்வர்... உடல்நலம் குறித்து விசாரிப்பு...!

மேலும், திங்கட்கிழமை ஆடிடோரியம் படிகட்டில் தான் அது நடந்தது என்று சொல்கிறார் அந்த மாணவி. உடனே மிதுன் மனைவி இதை என்னிடம் சொல்லி இருக்கலாமே என கேட்கிறார். அதோடு உன் பெற்றோரை அழைத்து வா மீரா மேடமிடம் பேசலாம் என்று சொல்கிறார்.

ஆனால் மாணவி அழுதுகொண்டே எப்படி அவர்களிடம் சொல்வது என்று கேட்கிறார். அதோடு வகுப்புகளுக்கு வராமல் கட் அடித்து ஏன் சுற்றுகிறாய், நீ படிக்கும் பெண் தானே என்று கேள்வி கேட்கிறார் மிதுனின் மனைவி. அதற்கு மாணவி வீட்டில் ஏதோ பிரச்சனை என்று சொல்கிறார்.

Also Read  நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

அதன்பிறகு பல விஷயங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள். “நீ பெண் தானே தைரியமாக இரு, தப்பாக நடப்பவர்களை ஓங்கி அரை” என்று சொல்கிறார் மிதுன் மனைவி.

அதற்கு மாணவி, “இதைத்தான் மிதுன் சக்ரவர்த்தி சாரும் சொல்கிறார். நான் என்ன தப்பு செய்தேன்” என்று வாதாடுகிறார். “யார் தப்பு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் என் முடிவு, என் கணவராக இருந்தாலும் தப்பு தப்பு தான்” என்று சொல்கிறார் மிதுன் மனைவி.

Also Read  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு, அடம்பிடிக்கும் இந்து அமைப்புகள்

ஆரம்பத்தில் மிதுன் மாணவியிடம் அத்துமீறியதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது மாணவி மிதுனுக்கு திருமணம் ஆனது தெரிந்தும் அவருடன் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்துள்ளது.

ஆனால் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது தான் இன்னும் தெரியவில்லை. அந்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

சீமானை கலாய்த்த சூர்யாவின் படம்…! ஆதரவாளர்கள் எதிர்ப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

Tamil Mint

அமைதியை கெடுப்போர் மீது நடவடிக்கை – காவல் ஆணையர் எச்சரிக்கை

Tamil Mint

ஒன்றிய அரசு என அழைக்க தடை இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை

Lekha Shree

டெல்லி முதல்வர் பயணம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Tamil Mint

கலாய்த்த நியூஸ் வெப்சைட் – தன் பாணியில் பதிலடி கொடுத்த ராதிகா…!

Devaraj

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு…!

Lekha Shree

ஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை‌ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தை…..

Jaya Thilagan

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Tamil Mint

12ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு!

Lekha Shree

தமிழக பொருளாதாரத்தை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன: முதல்வர்

Tamil Mint