கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ..!


கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி வழக்கில் சின்மயா பள்ளியில் முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆர். எஸ். புரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, சின்மயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Also Read  மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, மிதுன் சக்கரவர்த்தி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பாக மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள், மாணவியின் உறவினர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read  கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! மருத்துவர் ரஜினிகாந்த் போக்சோவில் கைது..!

இதுதொடர்பாக பேசியவர்கள், “மாணவி புகார் கொடுத்தும் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாணவியை மிரட்டி அந்த குற்றத்தை மூடிமறைத்து மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும்.

அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம். போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும். கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்குவோம்” என தெரிவித்தனர்.

Also Read  தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

இந்த போராட்டத்தின் எதிரொலியாக தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

Lekha Shree

கனமழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

“ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்கக்கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!

Lekha Shree

ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: இன்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று!

suma lekha

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சகாயம் ஐஏஎஸ்

Tamil Mint

பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்தவர் மீது வழக்கு பதிவு.!

suma lekha

தாம்பரம்: கல்லூரி மாணவி குத்திக் கொலை..! சென்னையை உலுக்கிய பகீர் சம்பவம்..! நடந்தது என்ன?

Lekha Shree

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

தீபாவளி திருநாள்: அமாவாசையால் டல்லடிக்கும் இறைச்சி விற்பனை..!

Lekha Shree