a

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிமுக வசமாகும் கொங்கு மண்டலம்?


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தீவிரமாக எண்ணப்படுகின்றன.

கடந்த தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கோவை மாவட்டம்

சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை,சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர் ஆகிய 8 இடங்களில் அதிமுகவும் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுகவும், கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யமும் முன்னிலை வகிக்கிறது.

Also Read  "அடுத்த முறையும் நான் தான் அதிபர்" - முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

திருப்பூர் மாவட்டம்

உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் காங்கேயம், திருப்பூர் தொகுதிகளில் திமுகவும் தாராபுரத்தில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.

நீலகிரி மாவட்டம்

உதகையில் பாஜகவும் கூடலூரில் மற்றும் குன்னூரில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.

ஈரோடு மாவட்டம்

கோபி, பவானிசாகர், பெருந்துறை, பவானி தொகுதிகளில் அதிமுகவும் ஈரோடு மேற்கு, அந்தியூரில் திமுகவும் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் மற்றும் மொடக்குறிச்சியில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.

Also Read  புயல் கரையை கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

நாமக்கல் மாவட்டம்

ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம் தொகுதிகளில் அதிமுகவும் சேந்தமங்கலம், நாமக்கல்,திருச்செங்கோடு தொகுதியில் திமுகவும் முன்னிலை

சேலம் மாவட்டம்

சேலம் தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், எடபப்டி தொகுதிகளில் அதிமுகவும் சேலம் மேற்கு மற்றும் மேட்டூரில் பாமகவும் சங்ககிரி, சேலம் வடக்கு தொகுதிகளில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது.

Also Read  வாகனங்களில் பம்பர்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

கரூர் மாவட்டம்

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. கரூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி முன்னிலை வகிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம்

பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகுதிகளில் திமுகவும் நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நிலத்தகராறு காரணமாக இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய 80 வயது முதியவர்

Tamil Mint

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!

Shanmugapriya

ஆண்டிப்பட்டி தொகுதி: திமுக வேட்பாளர் அண்ணன்… அதிமுக வேட்பாளர் தம்பி…! சபாஷ் சரியான போட்டி!

Lekha Shree

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

டெல்லி: ‘பேட்டரி-டார்ச்’ சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

Tamil Mint

தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி…! கதறும் தமிழர்கள்…!

Devaraj

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

Tamil Mint

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு:

Tamil Mint

இன்னொரு புயல் உருவாகிறதா?

Tamil Mint