தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு


தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்றும் மற்றவர்கள் ஆன்- லைனில் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.

Also Read  1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை முடிவு

கல்லூரிகள் வாரத்துக்கு 6 நாட்கள் மட்டும் செயல்பட வேண்டும், கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ள மாணவர்களை கல்லூரியில் அனுமதிக்கக் கூடாது, 50 சதவிகித ‌மாணவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும், கூட்டம் கூடுவதைத் தவிர்த்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம், மற்றவர்கள் ஆன்லைனில் கற்றலைத் தொடரலாம்.

Also Read  தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முடிந்தவரை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் பட்ஜெட் 2021 – பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!

Lekha Shree

இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை கடுமையாக விமர்சித்த பாதிரியார் கைது!

Lekha Shree

சாலையை சேதப்படுத்தி பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்த அதிமுக நிர்வாகிகள்!

Lekha Shree

பைக் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துங்கள்: உயர்நீதிமன்றம்

Lekha Shree

கொரோனாவால் குவியும் சடலங்கள்…! இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தாமதம்!

Lekha Shree

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint

அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் காலமானார்! – பல்வேறு தலைவர்கள் இரங்கல்!

Shanmugapriya

பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

Tamil Mint

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Tamil Mint

விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

sathya suganthi

இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு…!

sathya suganthi

பரோட்டா சாப்பிடுவதில் தகராறு – ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!

Shanmugapriya