பயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் குழு அமைப்பு : முதல்வர் உத்தரவு


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், பயிர்ச்சேதம் குறித்த விவரங்களை பார்வையிட்டு, அறிக்கை அளிக்க அமைச்சர் குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, வெளியான அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

Also Read  தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கொரோனா பாதிப்பு…!

இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும். பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (11-11-2021) உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்தக் குழுவில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை அமைச்சர் திரு.சிவ.வீ மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Also Read  இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் எது தெரியுமா..? மத்திய சுகாதாரத்துறை தகவல்..

இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை: தொடர்மழை காரணமாக தீப்பிடித்து எரிந்த போக்குவரத்து சிக்னல்..!

Lekha Shree

தினகரன் மகளுக்கு திருமண ஏற்பாடு

Tamil Mint

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..?

Tamil Mint

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

ஆளுநரை சந்தித்து ஏன்? அமைச்சர்கள் விளக்கம்

Tamil Mint

குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Lekha Shree

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint

“வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது” – பாமக நிறுவனம் ராமதாஸ்

Lekha Shree

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

அதிமுக-பாமக கூட்டணி முறிவு..! – ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி!

Lekha Shree

சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Lekha Shree