a

தேர்தல் விதியை மீறி ரூ.260 கோடி செலவு செய்த பாஜக – எஸ்.வி.சேகர் பரபரப்பு தகவல்


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேலிடம் மூலம் பல்வேறு அழுத்தங்கள் கொடுத்த போதிலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

கடந்த கால தேர்தல்களில் பாஜவுக்கும் நோட்டாவுக்கும் இடையே பல தொகுதிகளில் போட்டி நிலவிய நிலையில், சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த 20 இடங்களில் எப்படியாவது கணிசமான வாக்குகளை பெற வேண்டிய கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டது.

20 தொகுதிகளிலும் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள் என்று ஒரு பட்டாளமே பிரசாரத்தில் ஈடுபட்டது.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தேர்தல் பிரச்சாரங்களில் அக்கட்சி தலைவர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

Also Read  பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

ஆனாலும் அவர்களுக்கே தங்கள் பிரச்சாரங்கள் மீதான நம்பிக்கை குறைவாக இருந்ததால் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பாஜக முக்கிய பிரமுகர் நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் பாஜக முன்னணியினர் டுவிட்டரில் விவாதம் நடத்தினர்.

அதில், தமிழகத்தில் பிரதமர் மோடி படத்தை கூட போடாமல் பிரசாரம் செஞ்சாங்க என்றும் நானா இருந்தால் பிரசாரம் செய்யாம வேனிலிருந்து கீழே இறங்கியிருப்பேன் என்றும் எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு பாஜக வேட்பாளருக்கும் தேர்தல் செலவுக்காக ரூ.13 கோடி கொடுத்திருக்காங்க என்றும் அதில் இப்ப தோல்வி அடைந்தவங்களும், வெற்றி பெற்றவர்களும் கணக்கு கொடுத்து இருக்காங்களா என்றும் கேள்வியும் எழுப்பி இருந்தார்.

Also Read  ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! - நடந்தது என்ன?

ஒரு வேட்பாளருக்கு 13 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்றால், பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் மொத்தம் 260 கோடி ரூபாய் பாஜ செலவு செய்துள்ளது என்பது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரு தொகுதிக்கு 30.80 லட்சம் ரூபாய் மட்டுமே வேட்பாளர் செலவு செய்ய முடியும் என்ற நிலையில், 13 கோடி செலவு செய்ய எப்படி தேர்தல் ஆணையத்தின் அனுமதி என்றும் இந்த விசயத்தில் தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் கண்டுக்காமல் இருந்ததா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வியும் எழுப்பி உள்ளனர்.

Also Read  கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!

சட்டமன்றத் தேர்தலில் ரூ.260 கோடி வரை பாஜ செலவிட்டுள்ளது என்று வெளிப்படையாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் எஸ்வி சேகரே தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கதுறை, தேர்தல் கமிஷன் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்தல் விதிமுறையை மீறி அதிகளவில் பணம் செலவழித்து 4 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உறவினர்களுக்கு இ-டெண்டர் அளிக்கப்படும் மாயம் என்ன? கமல் கேள்வி

Devaraj

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட “இந்தி ஆலோசனை குழுவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் இடம் பிடித்துள்ளார்.

Tamil Mint

உதயநிதியை எதிர்த்து போராட்டம்

Tamil Mint

யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த “பப்ஜி” மதன் கைது

sathya suganthi

சைலஜா டீச்சருக்கு அரசு கொறடா பதவி…! நியூஸ் ரீடராக இருந்தவருக்கு சுகாதாரத்துறை…!

sathya suganthi

கொரோனா தடுப்பூசி – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

sathya suganthi

விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்?

Tamil Mint

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

Tamil Mint

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தடுமாறும் தமிழகம்? முழு விவரம்..!

Lekha Shree

யூடியூபர் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் – காவல்துறை

Lekha Shree

லண்டனில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலுக்கு ஒப்படைப்பு

Tamil Mint

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்

Tamil Mint