மளிகை தொகுப்பு தொடர்பாக எழுந்த புகார்கள் – உணவு வழங்கல் துறை அதிரடி உத்தரவு!


தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனுடன் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக கொடுக்கப்படும் என்றார்.

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை மே மாதத்தில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் தவணை மற்றும் 14 வகையான மல்லிகை தொகுப்பு வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று தொடங்கப்பட்டது.

Also Read  தமிழ்நாடு தொழில்முறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ…!

இந்நிலையில், மாளிகை தொகுப்பு தரம் குறித்த பல புகார்கள் எழுந்தன. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பலருக்கு காலாவதியான டீதூள் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் புதிய பாக்கெட்டுகளை மாற்றி ஏற்கனவே கடையில் இருந்த காலாவதியான பாக்கெட்டுகளை விநியோகம் செய்தது தெரியவந்தது.

Also Read  "பீகாரிகளுக்கு மூளை கம்மி!" - அமைச்சர் நேரு பேச்சால் சர்ச்சை!

இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் உள்ள மளிகை பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக உணவு வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ரேஷன் கடைகளில் பணியில் உள்ள பணியாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

Also Read  ஆ.ராசா சர்ச்சை பேச்சு… நழுவுகிறதா திமுக வெற்றி வாய்ப்பு?

ரேஷனில் வினியோகம் செய்யும் பொருட்கள் காலாவதியாகி இருந்தால் அதை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எஸ்.பி.பி உடல்நிலை: சர்வதேச மருத்துவக் குழு அறிவுரை

Tamil Mint

மழைக்கு வாய்ப்பு : இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

sathya suganthi

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Tamil Mint

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்

Tamil Mint

தமிழறிஞர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

Tamil Mint

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கடலலை போல் வழியும் பக்தர்கள் கூட்டம் இது வரை 1 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்

Tamil Mint

நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு – விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

sathya suganthi

தொடரும் படுபாதகச் செயல்கள்: திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட 17 வயது மாணவி

Tamil Mint

ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

Tamil Mint

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்

Ramya Tamil

கும்பகோணம் அருகே ஆலங்கட்டி மழை – உற்சாகமடைந்த மக்கள்…!

sathya suganthi

நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!

Devaraj