a

“கொரோனா பாசிடிவ்” முறைகேடு – தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழகத்தின் கணக்கில் சேர்த்ததாக சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் Medall என்ற ஆய்வகத்திற்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் எடுக்கப்பட்ட மாதிரிகளாகக் காட்டி, அவை ஐசிஎம்ஆர் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது.

மே 19 மற்றும் 20 தேதிகளில் ‘கொரோனா நெகட்டிவ்’ என வந்த நான்காயிரம் முடிவுகளை, ‘கொரோனா பாசிடிவ்’ என மாற்றி ஐசிஎம்ஆர் பதிவேட்டில் சேர்த்ததும் தெரியவந்துள்ளது.

Also Read  மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

மேலும் தினமும் ‘கொரோனா பாசிடிவ்’ என பதிவுசெய்யப்படும் நோயாளிகளின் விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட தவறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வேறு மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கையை தமிழகத்தின் கணக்கில் காட்டுவதன் மூலம், தமிழ்நாட்டில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக் கணக்கு உயர்ந்துள்ளதாகவும் இதுபோல தவறான எண்ணிக்கையைத் தந்ததால், மத்திய அரசு ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் தவறு நேரிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.

Also Read  சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

மேலும், இந்த ஆய்வகத்திற்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே கூட்டணி இருக்கலாம் என கருதுவதாகவும், இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை வரவைத்து, அவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்திருக்கக்கூடும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உண்மையிலேயே ‘கொரோனா பாசிடிவ்’ வந்த நோயாளிகளின் முழுமையான விவரங்களை அளிக்காததால் அந்த நோயாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தடைபட்டன என்றும் சுகாதாரத் துறை கூறியிருக்கிறது.

Also Read  பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

இதனால், இந்த ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக தரப்பட்ட உரிமத்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் மூன்று நாட்களுக்குள் இது தொடர்பாக விரிவான அறிக்கையை சுகாதாரத் துறை இயக்குனருக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வடிவேலு பாலாஜி உயிரிழந்தது எப்படி?

Tamil Mint

பிறந்தநாள்: செல்பி வெளியிட்ட விஜயகாந்த், வாழ்த்து தெரிவித்த முதல்வர்

Tamil Mint

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை

Tamil Mint

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint

வேளாண்துறையை அமைச்சர் கே. பி. அன்பழகனியிடம் கூடுதலாக ஒப்படைப்பு

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 18.5.2021

sathya suganthi

சசிகலாவின் பாதுகாப்பிற்கு ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர்கள் நியமனம்!

Tamil Mint

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்

Jaya Thilagan

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று – முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு  கொரோனா பரிசோதனை

Tamil Mint

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்

Tamil Mint