a

ஜனநாயக மாதர் சங்கத்தை கட்டியெழுப்பிய மைதிலி சிவராமன் – உடல்நலக்குறைவால் காலமானார்


சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் மைதிலி சிவராமன், ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பிய நிறுவனர்களில் ஒருவர்.

கீழவெண்மணி தொடங்கி வாச்சாத்தி வரை அடித்தட்டு மக்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர், உணர்வுபூர்வமான எழுத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை விதைத்தவர் மைதிலி சிவராமன்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த இவர், சென்னையில் படித்தவர்.
டெல்லியில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்’ நிறுவனத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மைதிலிக்கு நியூயார்க்கில் உள்ள ‘சிரக்யூஸ் பல்கலைக்கழக’த்தில் முழு உதவித் தொகையோடு படிக்க வாய்ப்பு கிடைத்தது. படிப்பை முடித்துவிட்டு அமெரிக்க அரசின் நிதித்துறையில் பணிபுரிந்தார்.

1960-களில் வியட்நாம் போருக்கு எதிராக நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள், கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக் கான போராட்டங்கள் அவரின் கவனத்தை ஈர்த்தன. அந்த அரசியல் உணர்வின் மூலம் மார்க்சியத்தின் பக்கம் வந்துசேர்ந்தார்.

Also Read  மயிலாப்பூரில் கமல் போட்டி?

அமெரிக்க அரசு வேலையை உதறிவிட்டு, ஐ.நா-வால் உருவாக்கப் பட்ட காலனியாதிக்க விடுதலைக் கமிட்டியில் ஆராய்ச்சி யாளராகப் பணியில் இணைந்தார்.

ஐ.நா. வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்த மைதிலிக்கு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணி காத்திருந்தது. ஆனால், அதில் இணையாமல் பீகாரில் இருந்த வினோபா பாவேயைச் சந்தித்தார்.
அத்தருணத்தில் கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது.

Also Read  சசிகலாவுடன் சந்திப்பு? - கண்காணிப்பு வளையத்தில் எம்எல்ஏக்கள்...!

கீழ்வெண்மணி அவலத்தைப் பல்வேறு இதழ்களில் எழுதியதோடு, கீழவெண்மணிப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப் பட்ட கணபதியாப்பிள்ளை கமிஷ னுக்குப் பல்வேறு ஆவணங்களைத் திரட்டியும் தந்தார்.

மைதிலியின் தீவிரத்தைப் பார்த்து வியந்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி.சிந்தன் மைதிலியை மார்க்சிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வந்தார்.

ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள ஆறு நிறுவனங்களின் தொழிற்சங்கங்களைத் தலைமை யேற்று வழி நடத்தினார். சி.ஐ.டி.யூ அமைப்பின் மாநிலப் பொறுப்புகளையும் வகித்தார்.

1973-ல் பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரோடு இணைந்து ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பினார் மைதிலி. பல்வேறு பெண்கள் அமைப்புகளோடு இணைந்து பெண்களுக்கான கழிவறைப் பிரச்னை முதல் இட ஒதுக்கீட்டுப் பிரச்னை வரை அனைத்திலும் முன் நின்றார்.

Also Read  தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

சிதம்பரம் பத்மினி வழக்கு, பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி வழக்கு எனப் பெண்களுக்கு எதிரான பல பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து சட்டப் போராட்டம் நடத்தினார்.

மக்கள் போராட்டங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மைதிலி, 2007-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக Alzheimer பாதிக்கப் பட்டார்.

இந்த தீவிர ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட மைதிலி சிவராமன்,
உடல் குறைவு காரணமாக காலமானார் .


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்

Tamil Mint

பாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்

sathya suganthi

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

Tamil Mint

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய 10 பாஜகவினர் கைது

Tamil Mint

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Tamil Mint

அதிமுக தலைமை அறிக்கை… அச்சமா? அறிவுரையா?

Devaraj

“பிச்சை எடு” என கூறிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த ‘கேப்டன்’ மகன்..!

Lekha Shree

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

சட்டப்பேரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு:

Tamil Mint

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரின் “உதயசூரியன்” கடிகாரம்…!

Lekha Shree