a

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! – நடந்தது என்ன?


டுவிட்டர் அலுவலகத்தில் டெல்லி போலீசார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா காங்கிரஸ் பிரதமர் மோடியின் நல்ல பிம்பத்தை கெடுக்கும் விதமாக கொரோனா சூழலை கையில் எடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், கோவிட் டூல்கிட் ஒன்றை உருவாக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடியை பற்றி அவதூறு பரப்ப முனைந்திருப்பதாக கூறப்பட்டது.

Also Read  பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கான குட்நியூஸ்..! மத்திய அரசு நிதியுதவி…!

இந்நிலையில் ட்விட்டர் இந்தியா அந்த டூல்கிட்டை சித்தரிக்கப்பட்ட செய்தி என கூறியது. அதைத்தொடர்ந்து இன்று டெல்லி போலீசார் அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் பதிவான கோவிட் டூல்கிட் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நேற்று டெல்லி போலீஸின் ஸ்பெஷல் செல் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Also Read  கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் - எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

அந்த டூல்கிட் தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பத் வெளியிட்ட ட்வீட் ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி என ட்விட்டர் நிறுவனம் கூறியதன் ஆதாரங்களை தருமாறும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இரண்டு போலீஸ் டீம்கள் டெல்லியின் லாடோ சராய் மற்றும் குருகிராமில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Also Read  1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

இதற்கு காங்கிரஸ், “இது பேச்சுரிமை மீதான படுகொலை” என கண்டனம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?

Devaraj

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

மைக் உடன் கூடிய மாஸ்க்! – கேரள மாணவரின் அசத்தல் ஐடியா

Shanmugapriya

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

Lekha Shree

டெல்லியில் மேலும் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

sathya suganthi

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

ஒரே ட்வீட்டால் கிரிக்கெட் கடவுளுக்கு நேர்ந்த பங்கம்…! முழு அலசல் இதோ…!

Tamil Mint

ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் – விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!

Devaraj

ஆக்சிஜன் மாஸ்க்குடன் வேலைக்கு வந்த வங்கி ஊழியர்! காரணம் இதுதான்!

Lekha Shree

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

நிலவில் இடம் கொடுத்த நிறுவனம்! – ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree