உத்தரப்பிரதேசம்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாயாரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ்..!


உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண்ணின் தாயாருக்கு வேட்பாளராக போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Also Read  "கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து" - ட்விட்டரின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அரசு!

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலை உறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 50 பெண் வேட்பாளர்கள் அடங்கிய 125 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Also Read  இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

அதை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். நாட்டையே உலுக்கிய பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஆஷா சிங்குக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலியல் பலாத்காரம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  "கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்" - விவசாயிகள் சங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆங்கிலேயரை மட்டுமின்றி கொரோனாவையும் விரட்டியடித்த 104 வயது முதியவர்…!

sathya suganthi

“விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” – பிரியங்கா காந்தி

Shanmugapriya

“பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற பாஜக!

Lekha Shree

“ஏழை மக்களின் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசு!” – ஈபிஎஸ் கண்டனம்..!

Lekha Shree

வெற்றி கணக்கை தொடங்குமா இந்தியா? இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதல்..!

Lekha Shree

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Jaya Thilagan

சிறுநீரகம் பாதித்த சிறுமியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Lekha Shree

“பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை” – மத்திய அரசு

Lekha Shree

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு: தங்கமணி மீது போலீஸ் வழக்கு பதிவு

suma lekha

“கோலியின் பேட்டி குறித்து கருத்து கூற விரும்பவில்லை!” – கங்குலி

Lekha Shree

நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

Jaya Thilagan

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது – எடப்பாடி பழனிசாமி!

suma lekha