அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!


அஜந்தா நியோக், காங்கிரஸ் சாா்பில் நான்கு முறை அசாம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அசாம் மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோலகாட் தொகுதி எம்எல்ஏவுமான அஜந்தா நியோக், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

Also Read  மார்ச்-ல் இருந்து மக்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக அஜந்தா நியோக் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது 2 நாட்கள் பயணமாக அசாமில் தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அவரை, அஜந்தா நியோக் நேற்று சந்தித்தார். அச்சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், “நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படவில்லை. ஆனால், என்னால் எனது கருத்துக்களை கட்சிக்குள் வெளிப்படுத்த முடியவில்லை. அதனால், தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பாஜகவில் சேரப்போகிறேன்” என தெரிவித்தார். 

Also Read  ஆக்சிஜன் சிலிண்டர் களுடன் ஆட்டோ! - கொரோனா நோயாளிகளுக்கு உதவ டெல்லியில் அசத்தல்!

அசாமில் அடுத்தாண்டு சட்ட பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதியோர் இல்லத்தில் சாப்பிட்ட ராகுல் காந்தி..!

suma lekha

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

“இரு தரப்பு உறவு மேம்பட, இரண்டு தரப்புமே முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” – சீனா

Tamil Mint

“கூட்டணியில் இருந்து விலகுவது பாமகவுக்கு தான் இழப்பு” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Lekha Shree

வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை – விவசாயிகள் கேள்வி

Tamil Mint

“ஸ்டாலினை தேர்தலில் பாஜகவின் சாதாரண தொண்டரே தோற்கடிப்பார்!” – கராத்தே தியாகராஜன்

Lekha Shree

ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் மரணம் – கேரளாவை அதிர வைத்த வரதட்சணை புகார்கள்…!

sathya suganthi

“பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி திமுக” – முதல்வர் பழனிசாமி சாடல்!

Shanmugapriya

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

மேகதாது அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம்’ – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி!

suma lekha

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா

Tamil Mint

“கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது ” – எடியூரப்பா திட்டவட்டம்!

Shanmugapriya