“கங்கனாவின் கன்னங்களை விட மென்மையான சாலை அமைக்கப்படும்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!


ஜார்க்கண்ட் மாநிலத்தில் காண்கிற எம்.எல்.ஏ ஒருவர் தனது தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என பேசியுள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Also Read  ட்ரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் - மத்திய அரசு அனுமதி!

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான டாக்டர். இர்பான் அன்சாரி என்பவர் தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கங்கனாவின் கன்னத்தை விட மென்மையானதாக அமைக்கப்படும் என உறுதி அளித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.

இர்பான் அன்சாரி இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் அவர் முகக்கவசம் அணிவது குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருந்தார்.

Also Read  ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

அதில், “யாரும் முகக்கவசங்களை நீண்ட நேரம் அணியக்கூடாது. அது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகக்கவசத்தை நீண்ட நேரம் அணிவதால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவையே மீண்டும் உள்ளே இழுக்க நேரிடும்” என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி…!

Devaraj

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ கவின்..!

Lekha Shree

போலி தடுப்பூசி சான்றிதழ்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

suma lekha

தனுஷின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?

Lekha Shree

பட்டப்பகலில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை!!!

Lekha Shree

சட்டமன்ற தேர்தல் 2021: தேமுதிக தனித்து போட்டி!

Lekha Shree

கப்பல் பார்ட்டியில் ஷாருக்கான் மகன் : தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

suma lekha

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்..!

Lekha Shree

“எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது” – அட்லி ட்வீட்

Shanmugapriya

இந்தியாவில் வேகமெடுக்கும் ஒமிக்ரான்: பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது..!

suma lekha

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

மோசமான வானிலையால் விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு

Tamil Mint