குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 13 பேர் பலி..! வெளியான அதிர்ச்சி தகவல்..!


முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் MI-17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 14 பேர் பயணித்ததாக கூறப்பட்டது.

Also Read  விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை... ஆறுதல் கூறிய புகழ்!

அப்போது மதியம் 12:20 மணி அளவில் ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

வெலிங்டன் ராணுவ மையத்தில் இன்று பிற்பகல் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுவதற்காக பிபின் ராவத் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நேரிட்டது.

Also Read  தமிழகத்தில் புதிதாக 1624 பேருக்கு கொரோனா தொற்று.!

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் மீட்டனர்.

காயமடைந்தவர்களை வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில், விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியுள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டரில் பயணித்ததாக கூறப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அவரின் உண்மை நிலை என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

Also Read  முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

Tamil Mint

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ…!

Lekha Shree

தமிழகத்தில் ஒரே நாளில் 1523 பேருக்கு கொரோனா.!

suma lekha

அமெரிக்கா செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!

suma lekha

“டி20 கேப்டன்சியில் இருந்து விலகுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு..!

Lekha Shree

அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு

Tamil Mint

சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tamil Mint

தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

மருந்து எடுக்காமல் ஊசியை மற்றும் குத்திய செவிலியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

போலி கோழிமுட்டை விற்பனை… அதிர்ச்சி அடைந்த மக்கள்..! ஆந்திராவில் பரபரப்பு..!

Lekha Shree

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி ரூபா அதிரடி டிரான்ஸ்பர்

Tamil Mint