தமிழகம்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!


தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காவலன் கேட் பகுதியில் கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை கடந்த 2 மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

அந்தவகையில் நேற்று காஞ்சிபுரத்தில் காவலன் கேட் பகுதியில் கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் கட்டிட சங்க தலைவர் ஆர்.பிரகாஷ், “கட்டுமான பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வை கண்டித்து 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Also Read  "தேனிலவில் இருக்கிறது திமுக!" - நடிகை குஷ்புவின் இந்த கூற்றுக்கு அர்த்தம் என்ன?

இங்கே காஞ்சிபுரத்தில் 10க்கும் மேற்பட்ட சகோதர சங்கங்களை இணைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கட்டுமான பொருட்களின் விலையானது கடந்த 5-6 மாதங்களாக அபரிமிதமான விலை உயர்வை கண்டுள்ளது. தற்போது அமைந்திருக்கும் அரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைத்து ஏழை, எளிய மக்களும் வீடு கட்ட எதுவாக ஒழுங்கு முறை ஆணையம் அமைப்போம் என தேர்தல் வாக்குறுதியாக கூறியதை நினைவு கூற விரும்புகிறோம்.

Also Read  ராகுல், பிரியங்காவுக்கு லக்கிம்பூர் செல்ல உ.பி. அரசு அனுமதி..!

அரசு சாமானிய மக்களும் வீடு கட்ட ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் ஸ்டீல், சிமெண்ட், பிவிசி உள்ளிட்ட பொருட்களின் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது.

அதை குறைக்கும் விதமாக ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து எங்கள் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என கூறினார்.

Also Read  கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்..... காரணம் இது தானா????

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இதுபோன்று நேற்று கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

Tamil Mint

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு:

Tamil Mint

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

sathya suganthi

ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி…!

Devaraj

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற
உயர்கல்வி செயலருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: உடனடியாக மாற்ற வேண்டும்!

Tamil Mint

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

Tamil Mint

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

ஜெர்மனி இளம்பெண் அளித்த புகார்: நடிகர் ஆர்யா போலீசில் ஆஜர்.!

mani maran

பாஜகவில் இணையும் சிவாஜி மகன்..! அட இவரும் இணைகிறாரா?

Tamil Mint