a

சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவின் புதிய பாடல் – வயது மீறிய உறவுக்கு ஊக்குவிப்பதாக புகார்


கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை எழுதி 100 இயக்குநர்கள், 100 பாடகர்களை வைத்து வீடியோவாக தயாரித்துள்ளார்.

இதன் முதல் பாடல் கடந்த மாதம் 18 ஆம் தேதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில் அண்மையில் காதலா என்ற தலைப்பில் டியூடியூப்பில் வெளியான பாடல் அதிக வைரலாகி உள்ள நிலையில், புதிய சர்ச்சை ஒன்றையும் கிளப்பி உள்ளது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் ஸ்ரீநிஷா பாடியுள்ள இந்த பாடல், 16 வயது கொண்ட ஒரு இளம் பெண், தன்னைவிட இரு மடங்கு வயது கொண்ட ஒரு கவிஞன் மீது காதல் கொள்வதாக எழுதப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

16 வயது சிறுமியாக அனிகா சுரேந்திரனும், வயதான கவிஞராக யோஹன் சாக்கோவும் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த பாடல் வரிகள், நம் பண்பாட்டுக்கு எதிரானதாகவும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை அதிகரிக்கும் வகையில் உள்ளதென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  கடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!

“வாய் முத்தம் வயது அறியுமா”, “வயதால் நம் வாழ்வு முறியுமா” என்ற பாடல் வரிகள், சிறுமிகளை வயது மீறிய உறவுக்கும் தவறான திசையில் வழி நடத்தக்கூடும் என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் உறவுகளை நெறிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக செவிக்கொடுத்து கேட்கப்படுவதில்லை என்றும் வயது மூத்தவன் மீது ஒரு சிறுமி காதல் கொள்ளும் வைரமுத்து இந்த பாடல் வரிகள் இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளதென்றும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

“தந்தை போல கணவன் வேண்டும்” என்ற வரியை மேற்கோள் காட்டியுள்ள சின்மயி, தனது பேட்டனையே வைரமுத்து தனது பாடல்களுக்கும் பயன்படுத்துவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மீ டூ இயக்கத்தின் மூலம், வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்த சின்மயி, அவர் மீது நடவடிக்கை எடுக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read  இந்தியில் பேசிய தொகுப்பாளினி - தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரகுமான்

அண்மையில் பத்மா ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டதையடுத்து, வைரமுத்துவின் மீதான பாலியல் புகாரையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், சிறுமி ஒருவர் வயதான நபரை காதலிப்பது போன்ற வீடியோவால், வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு மேலும் தீவிரமடைந்துள்ளது.

Also Read  'சர்தார்' படத்தில் இணைந்த 'கர்ணன்' பட நடிகை…!

அதே சமயம், 15, 17 வயது சிறுமிகள் தன்னை விட அதிக வயது உடையவர்களை காதலிப்பதும், குழந்தை திருமணம் செய்து வைக்கப்படுவதும் போன்ற காட்சிகள் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது என்றும், ஆனால் இன்று திடீரென இது பாவச் செயல் போன்று பேசப்படுவது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல என்றும் வைரமுத்துவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பாடல், பாடம் நடத்தும் ஆசிரியர் மீது வரும் ஈர்ப்பு போன்றது என்றும் டீன் ஏஜ்ஜில் அனைவரும் இதை கடந்து வந்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, Legal Rights Protection Forum என்ற அமைப்பு சார்பில், வைரமுத்துவின் புதிய பாடல் வரிகள் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை யூடியூப்பில் இருந்து நீக்கவும், கலைஞர் டிவியில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

Devaraj

விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம்!

Tamil Mint

பிக்பாஸ் சீசன் 5 குறித்த சூப்பர் அப்டேட் இதோ..!

Lekha Shree

“ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன” – மனம் திறந்த கவுதம் மேனன்

Shanmugapriya

30 புகைப்படங்கள்… 30,00,000 மகிழ்ச்சியான நினைவுகள்… இணையத்தை கலக்கிய காஜல் அகர்வால்…!

sathya suganthi

மலேசியாவில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையிடப்படவில்லை… ஏமாற்றத்தில் கோலிவுட் ரசிகர்கள்!

Tamil Mint

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவரா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

துபாயில் அந்தரத்தில் சாகசம் செய்த பிக்பாஸ் பிரபலம்…!

Devaraj

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்

Lekha Shree

மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil