‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கொண்டாட்டத்தில் புகழ் இல்லை! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளில் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது ‘குக் வித் கோமாளி’. அதற்கு முக்கிய காரணம் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகள் செய்த சேட்டைகள் தான்.

அதிலும் குறிப்பாக அனைவரது மனதிலும் பேவரைட் கோமாளியாக இருப்பது புகழ் தான். இந்நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியால் இதன் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இது ஆகஸ்ட் 8ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Also Read  "இது வேற லெவலா இருக்கே!" - 'Money Heist' வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்!

இதுகுறித்து 2 ப்ரோமோக்கள் வெளியானது. அந்த 2 ப்ரோமோவிலும் புகழ் இல்லை. இதனால் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

குக் வித் கோமாளி சீசன் 2-ல் புகழ், பவித்ரா, தர்ஷா, பாபா பாஸ்கர் ஆகியோருடன் செய்த காமெடிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது.

Also Read  இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

அதனால், கொண்டாட்டத்தில் புகழ் இல்லை என்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வியெழுப்பினர்.

இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற ‘டிக் டாக்’ சக்தி சமூக வலைத்தளத்தில் நேரலையில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய போது ஒருவர், “ஏன் சீசன் 2 கொண்டாட்டத்தில் புகழ் இல்லை?” என கேட்டார்.

Also Read  'தெறி' படப்பிடிப்பில் விஐய் மகன் சஞ்சய் - கலக்கல் போட்டோ இதோ…!

அதற்கு சக்தி, “அவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதனால் இந்நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை” என தெரிவித்தார்.

தங்களின் பேவரைட் காமெடியன் வெள்ளித்திரையில் கலக்குவதை ரசிகர்கள் கொண்டாடினாலும் அவரை சின்னத்திரையில் மீண்டும் எப்போது காண்போம் என பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ் காட்டும் STR-ன் மாநாடு! ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

HariHara Suthan

5க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றவர்களிடம் ‘ஏன்’ என கேள்வி கேட்கும் ‘பிக்பாஸ்’ நடிகை..!

Lekha Shree

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

இவங்களுக்கு வயதே ஆகாதா…நடிகை நதியா பெற்றோருடன் உள்ள புகைப்படம் வைரல்..!

HariHara Suthan

பாலிவுட் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சூப்பர் லுக்! வைரலாகும் புகைப்படம் இதோ!

HariHara Suthan

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

ரஜினியை அடுத்து ‘Man Vs Wild’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபல நடிகர்..! யார் தெரியுமா?

Lekha Shree

தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா நடிகர் காளிதாசுக்கு எழுதிய கடிதம்…!

Lekha Shree

‘மஹா’ பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்…!

Lekha Shree

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

SIIMA 2021: 7 விருதுகளை வென்று குவித்த சூர்யாவின் ‘சூரரைப்போற்று’…!

Lekha Shree