எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும்! – இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!


கொரோனா 3வது அலை குறித்து இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, “கடந்த கால அனுபவங்கள் சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது.

எந்த நேரத்திலும் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும். சுற்றுலா, யாத்திரை எல்லாம் மக்களுக்கு அவசியமானதுதான். ஆனால், இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Also Read  "நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா" - பிரதமர் மோடி

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியது.

உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகரித்து வந்தன. ஏப்ரல்-மே மாதங்களில் உச்சத்துக்கு சென்ற கொரோனா பரவல் ஜூன் மாதங்களில் படிப்படியாக குறையத் தொடங்கியது.

அதே நேரத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, அருணாசலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

Also Read  ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும், சில தினங்களுக்கு முன் உருமாறிய கப்பா வைரஸ் தொற்று உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது கொரோனா 3வது அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கமும், “கொரோனா மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது. எந்த நேரத்திலும் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read  நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா புதிய உச்சம் – இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

திருப்பதி தேவஸ்தானத்தின் பலே யோசனை – துளசி விதை பையில் லட்டு பிரசாதம்!

Jaya Thilagan

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது: விடிவு காலம் வருமா?

Tamil Mint

ஜனவரி 4 முதல் புதுவையில் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

அடுத்தடுத்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! – ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா!

Lekha Shree

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

மாட்டு சாணம் சிகிச்சை.. இந்த கொடிய தொற்று ஏற்படலாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

50 வருடமாக ஒரே தொகுதியில் எம்.எல்.ஏ..! அரசியல் அசுரவாதி உம்மன் சாண்டி ஓர் பார்வை…

HariHara Suthan

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil