இந்தியாவை மிரட்டும் கொரோனா…அச்சுறுத்தும் ஒமிக்ரான்.. தற்போதைய நிலை என்ன?


இந்தியாவில் புதிதாக 1,79,723 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 1,59,632 ஆக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44 ஆயிரம் பேருக்கு மேல் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 7 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.இதன் மூலம் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 மடங்கு வரை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 2-ம் அலை வேகமாக பரவிய நேரத்தில் கூட ஒரு வார பாதிப்பு 1.3 லட்சத்தில் இருந்து 7.8 லட்சத்தை தொடுவதற்கு சுமார் 5 வாரங்கள் வரை ஆகி இருந்தது. ஆனால் தற்போது ஒரே வாரத்தில் 6 மடங்கு உயர்ந்திருப்பது 3-ம் அலை மின்னல் வேகத்தில் பரவுவதை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.

Also Read  பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 2.20 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்று ஒரேநாளில் 44,388 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
3-வது அலையில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் புதிதாக 22,751 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு வார பாதிப்பு 10,769-ல் இருந்து 95 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

பீகாரில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. அங்கு கடந்த ஒரே வாரத்தில் 17,871 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. முந்தைய வார பாதிப்பு 1,073 ஆக இருந்த நிலையில், ஒரு வாரத்தில் பாதிப்பு சுமார் 17 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.தமிழ்நாட்டில் 12,895, கர்நாடகாவில் 12,000, உத்தரபிரதேசத்தில் 7,680, கேரளாவில் 6,238, குஜராத்தில் 6,275, ராஜஸ்தானில் 5,660, அரியானாவில் 5,166 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.

Also Read  ஒமைக்ரானை தொடர்ந்து புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்’ கண்டுபிடிப்பு..!

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 44 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 146 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,83,936 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,41,639, கேரளாவில் 49,591 பேர் அடங்குவர்.

கொரோனா ஒருபக்கம் மிரட்ட மறுபக்கம் ஒமிக்ரான் இந்தியாவில் 27 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 410 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நான் தினமும் மாட்டு சிறு நீரை குடிக்கிறேன்” – பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

Shanmugapriya

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

Tamil Mint

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு… தர்மசாலாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

Lekha Shree

28 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வீடு திரும்பிய ஆர்யன் கான்..!

Lekha Shree

‘லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

Lekha Shree

முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா – பீதியில் அதிமுக…!

Devaraj

83 முறை ரத்த தானம் செய்த ஆந்திராவை சேர்ந்த நபர்!

Shanmugapriya

வீடுகளுக்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள் – மார்ச் முதல் அமல்!

Lekha Shree

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

“கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வரன் தான் வேண்டும்” – திருமண டிமாண்ட் பட்டியலில் சேர்ந்தது கொரோனா தடுப்பூசி!

sathya suganthi

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi